அப்படியே அவளின் கண்கள் ஆர்வமின்றி லிஃப்ட்டில் அருகில் இருந்தவர்கள் பக்கம் சென்றது.
அலுவலகம் தொடங்கும் காலை நேரம் என்பதால் கூட்டம் அதிகமாக இருந்தது. தெரிந்தவர்கள் அவளை பார்த்து புன்னகைத்தனர். பதிலுக்கு புன்னகைத்தப் படி பார்வையை திருப்பியவளின் கண்களில் அவன் தெரிந்தான். அதிர்ந்துப் போனாள் தேன்மொழி!
இது அவனே தானா???
கண்கள் தெறித்து விடுவதுப் போல உற்று அவனையே பார்த்தாள்!
சந்தேகமே இல்லாமல் அவனே தான்!
அவனுக்கு அவளை நினைவிருக்குமா????
தேன்மொழி திகைப்பில் இருந்து வெளி வர முடியாது கேள்வியோடு அவனையே பார்த்தபடி இருந்தாள்...
அவள் பார்வை அவன் மீது இருந்ததை உணர்ந்து தானோ என்னவோ அவனும் அவள் பக்கம் திரும்பினான்.
இருவர் கண்களும் சந்தித்துக் கொண்டன!!!!
அவன் முகத்திலும் வியப்பும், திகைப்பும் ஒன்றாக தோன்றியது.
அவனுக்கும் அவளை நினைவிருக்கிறது!!!!!
✽✽✽
"தேன்மொழி மேடம், ஃபோர்த் ப்ளோர் வந்தாச்சே நீங்க இறங்கலையா?"