(Reading time: 6 - 11 minutes)
Engeyo partha mayakkam
Engeyo partha mayakkam

சென்றுக் கொண்டிருந்த தேன்மொழியிடமே இருந்தது...

   

இங்கே தான் வேலை செய்கிறாளா???

   

“சத்யா... சாப்பிடலாமான்னு கேட்கிறார்... சரின்னு சொல்லு... எனக்கு செம பசி...”

   

அவனின் கையை மெல்லக் கிள்ளி, அவனுக்கு மட்டும் கேட்பதுப் போல காதில் கிசுகிசுத்தாள் அவனின் பக்கத்தில் இருந்த சங்கீதா.

   

அந்தக் கிள்ளலில் உணர்வு பெற்றவன், “ஷுயர், ஷுயர் மிஸ்டர் முருகன்...” என்றான்.

   

முருகன் அவர்கள் இருவரையும் பக்கத்தில் இருந்த அறைக்குள் அழைத்துச் செல்ல, உள்ளே போகும் முன், மீண்டும் ஒரு முறை தேன்மொழி சென்ற திசையைப் பார்த்தான் சத்யா.

   

ஹுஹும் அவளை அங்கே எங்கும் காணவில்லை...

   

மனசுக்குள் ஏமாற்றம் தோன்ற, பார்வையையும், கவனத்தையும் திருப்பினான்!

   

அவனுடைய ஈஸ்வரி ப்ரைவேட் லிமிடெட்  நிறுவனத்துடன் இந்த கண்ணன் டூல்ஸ் ப்ரைவேட் லிமிட்டட்  நிறுவனம் பல்வேறு ஒப்பந்தம் செய்ய விரும்பியிருந்தது. அதற்கான ஒப்பந்தத்தை பேசி முடிவு செய்ய தான் அவன், அவனின் தோழியும், சென்னை கிளை மேனேஜருமான சங்கீதாவுடன் வந்திருந்தான். 

   

அவர்களுக்கு என பிரத்தியேகமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த உணவு பரிமாறப் பட்டது...

   

சாப்பிடும் போது, அவர்களின் கம்பெனி பற்றி, அங்கே இருக்கும் உற்பத்தி திறன் பற்றி எல்லாம் விவரித்துக் கொண்டிருந்தார் முருகன்.

   

அவரின் பேச்சை கூர்மையாக கவனித்தாலும், சத்யாவின் மனம் அவ்வப்போது லிஃப்ட்டில் பார்த்த தேன்மொழியிடமே சென்று வந்துக் கொண்டிருந்தது.

   

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.