(Reading time: 8 - 15 minutes)
En mel undranukkethanai anbadi
En mel undranukkethanai anbadi

Chillzee Originals : தொடர்கதை - என் மேல் உன்றனுக்கெத்தனை அன்படி - 03 - சசிரேகா

  

This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.

   

அன்று போல இன்றும் அவளது பெயர் இருந்த ப்ளக்ஸ் போர்டை பார்த்து கண்கலங்கினார்

   

”இன்னிக்கு கல்யாணம் நல்லபடியா நடக்கனும்” என சொல்லிக் கொண்டே மண்டபத்திற்குள் சென்றவர் வந்தவர்களை வரவேற்று உபசரிக்கலானார் சிவசங்கரன்.

   

முதல் நாள் கல்யாணம், அடுத்த நாள் சென்னையில் ரிசப்ஷன் என ஏற்பாடு செய்திருந்தனர், மாப்பிள்ளையின் நல்ல மனதிற்காகவே அவர் சொல்படி கேட்டுக் கொண்டார் சிவசங்கரன், அவரும் அமைதியானவர்தான், யாருக்கும் ஒரு சின்ன கெடுதல் கூட நினைக்காதவர், தன்னைப் போலவே மாப்பிள்ளையும் அமைந்துவிட்டதாக நினைத்து பெருமிதம் கொண்டார்.

   

அவருக்கு சென்னையிலும் சொந்த பந்தங்கள் உண்டு, நண்பர்கள் உண்டு அதே போல அவரின் மனைவி கன்னியாகுமரியை சேர்ந்தவர் என்பதால் அவரின் சொந்தங்கள் அனைத்தும் திருமணத்தைக் காண கன்னியாகுமரியிலிருந்து மதுரை வந்து சேர்ந்தனர். அவர்கள் தங்குவதற்காக பெரிய ஓட்டலில் ரூம் எடுத்து அனைத்து ஏற்பாடுகளையும் செய்தார் சிவசங்கரன். தன் பக்கம் சொந்தங்களுக்கு எவ்வித கஷ்டமும் வரக்கூடாதென அவர் பார்த்துக் கொண்டார். அவரே தனது கடையில் இருந்து ஜவுளிகளை தனது பக்க சொந்தங்களுக்கும் மாப்பிள்ளை வீட்டு சொந்தங்களுக்கும் தந்தார், மாப்பிள்ளைக்கும் அவரே பட்டு வேட்டி சட்டை, ரிசப்ஷனிற்கு ஏற்ப கோட் சூட் என ரெடியாக வைத்திருந்தார்.

   

ஒரே பெண் என்பதால் அவருடைய சம்பாத்தியம் அனைத்தும் அவளுக்குத்தான். கடை, வீடு அவர் வாங்கி வைத்த சொத்துக்கள் அனைத்தும் அவளுக்குத்தான். அவளுக்காக திருமணத்தன்று அணிவதற்காக 100 சவரன் நகைகளை வாங்கி வைத்திருந்தார். இன்னும் 400 சவரன் நகைகளை லேட்டஸ்ட் மாடலில் வாங்க ஆர்டரும் செய்துவிட்டார். திருமணம் முடிந்து  மறுவிருந்துக்கு சென்னைக்கு மாப்பிள்ளையும் பெண்ணும் வந்தால் அப்போது ஆர்டர் செய்த நகைகளை அவளுக்கு தரலாம் என நினைத்தார்

   

மாப்பிள்ளை வீட்டாரே திருமணத்தை ஏற்பாடு செய்திருந்தாலும் மிச்ச செலவுகளை சிவசங்கரனே பார்த்துக் கொண்டார். திருமண செலவுகள் மட்டும்தான் அவர்களுடையது, சென்னையில் நடைபெறும் ரிசப்ஷனுக்கு தேவையான ஏற்பாடுகள் அனைத்தையும் சிவசங்கரனே பார்த்துக் கொண்டார்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.