”ஏய் என்னடி இது, இன்னும் கொஞ்ச நேரத்தில மேடைக்கு போகனும் இப்ப போய் அப்பாவை பார்க்கனும்ங்கற” சிவரஞ்சனி திட்ட அதற்கு அவளோ
”அம்மா ப்ளீஸ் அம்மா இதுக்கப்புறம் நேரமே கிடைக்காதும்மா ப்ளீஸ்மா” என கெஞ்ச உடனே அவரின் அண்ணன் மகள் ஓடிச்சென்று சிவசங்கரனை அழைத்துக் கொண்டு வந்து சம்யுக்தாவின் முன் நிப்பாட்டினாள்.
”அப்பா” என ஆசையாக பேச வந்தவளை எட்ட நிற்க வைத்து ஏற இறங்க பார்த்து மெச்சிக் கொண்டார். அவருக்கு பெருமையாக இருந்தது
”அற்புதமா இருக்கம்மா மகாராணி போல இருக்க“
”அப்பா நான் உங்களை ரொம்ப மிஸ் பண்றேன்பா“ என கண்கள் கலங்க சொல்ல அவரும்
”நானும்தான்மா” என சொல்ல அவளோ தன் தந்தையின் தோளில் தலை சாய்த்துக் கொள்ள அவரும் மகளை ஆறுதல்படுத்தினார்
”தைரியமா இருக்கனும், எந்தப் பிரச்சனை வந்தாலும் அமைதியான வழியில கையாளனும், புருஷன்தான் உனக்கு எல்லாமே, அவனை விட்டு நீ பிரியக்கூடாது, உன் உலகத்தில அவருக்கு நிறைய பங்கு இருக்கு, நீயில்லைன்னா அவர் இல்லைங்கற அளவுக்கு அவர் மேல பாசம் வைக்கனும் அந்தளவுக்கு நீ அன்பா அவர்கிட்ட நடந்துக்கனும்”
”அம்மா உங்க மேல காட்டற அன்பு மாதிரியாப்பா“
”ஆமாம்மா உன் அம்மாதான் உனக்கு ரோல்மாடலே, அவளைப் போல நீ குடும்ப வாழ்க்கையை வாழு அப்புறம் பாரு உன் வாழ்க்கை சந்தோஷமா இருக்கும்”
”சரிப்பா” என சொல்லும் போதே மேடையில் இருந்து அழைப்பு வரவும், அவரே தன் மகளை அழைத்துக் கொண்டு மேடைக்குச் சென்றார்.