(Reading time: 8 - 15 minutes)
En mel undranukkethanai anbadi
En mel undranukkethanai anbadi

பார்க்க அழகாக ஆடம்பரமாக இருந்த புடவையில் சம்யுக்தாவின் அழகு இன்னும் மெருகேறியது. கூடவே அவளுக்காக 100 சவரனில் தங்க வைர நகைகள் வாங்கி வைத்திருந்தார், அதையும் அவளுக்கு சிவரஞ்சனியும் அவரின் அண்ணியும், அண்ணன் மகளும் சேர்ந்து அணிவித்து ஏற்கனவே பேரழகியாக இருந்த சம்யுக்தாவை இப்போது தேவலோக கன்னியாகவே மாற்றிவிட்டார்கள்.

   

அவளுக்கு திருஷ்டி படக்கூடாதென சிவரஞ்சனியோ கன்னத்தில் சிறிய அளவில் மை பொட்டு இட்டார் அதைக்கண்ட சம்யுக்தாவோ

   

”அய்யோ அம்மா என்னம்மா இது கருப்பு பொட்டு வைச்சிருக்க பாரு என் அழகே போயிடுச்சி“ என அலுத்துக் கொண்டாள் அதற்கு அவரோ

   

”இது திருஷ்டிக்கு, நீ இன்னிக்கு எவ்ளோ அழகா இருக்க தெரியுமா, ஊர் கண்ணு உன் மேல பட்டு உனக்கேதாவது ஆயிடக்கூடாதுல்ல, அதுக்குத்தான் இது, மாப்பிள்ளை பார்வை கூட கொள்ளிக்கண்ணா போயிடுச்சின்னா என்ன செய்றது உனக்கு உடம்பு சரியில்லாம போகாதா” என பேச அதற்கு சம்யுக்தா உள்பட அனைவருமே கலகலவென சிரித்தார்கள். அதில் சிவரஞ்சனியோ

   

”எதுக்கு சிரிக்கறீங்க நான் என்னத்த அப்படி சொல்லிட்டேன்” என கோபமாக கேட்க அதற்கு அவரின் அண்ணன் மனைவியோ

   

”எப்படியிருந்தாலும் மாப்பிள்ளை சம்யுக்தாவை பார்க்காமயா இருப்பாரு, இதுக்காக தினமும் அவளுக்கு திருஷ்டி சுத்தி போட ஆரம்பிச்சா வருஷக்கணக்கா இதே வேலையாதான் இருக்கனும்” என சொல்ல சம்யுக்தாவோ 

   

“அத்தை அப்பா எங்க அத்தை” என கேட்க

   

”அவர் வெளிய வர்றவங்களை உபசரிச்சிக்கிட்டு இருக்கார்மா”

   

”அவரை பார்க்கனும் அத்தை” என சொல்ல அதற்கு

   

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.