மண்டப வாசலில் பிளக்ஸ் போர்டு கூட அவரேதான் வைத்தார். அதை பார்த்துவிட்டு நேராக மண்டபத்திற்குள் நுழைந்தார்.
அங்கு மண்டப வாசலில் சிவரஞ்சனியின் அண்ணன் கைலாசம் நின்று வருவோர்களை கைகூப்பி வரவேற்றுக் கொண்டிருந்தார். அதே போல அவருக்கு பக்கத்தில் இளங்கோவன் வீட்டு சார்பில் அவனது பெரியப்பா நின்று தங்கள் பக்கம் சொந்தங்களை வாயார வரவேற்றுக் கொண்டிருந்தார். கைலாசமோ சிவசங்கரனை கண்டதும்
”ஏம்பா சங்கரா பொண்ணோட அப்பன் நீ, வெளிய இருந்தா எப்படியாம் உள்ள உனக்கு நிறைய வேலைகள் இருக்குமே போகலையா”
”போகனும் இப்பதானே ஒவ்வொருத்தரா வர ஆரம்பிச்சிருக்காங்க, உள்ளேயும் மேடையில மாப்பிள்ளை பொண்ணு வரலையே அதுவரைக்கும் நான் வர்றவங்களை வரவேற்கறேனே” என சொல்லும் போதே அவருக்கு தெரிந்த சென்னையைச் சேர்ந்தவர் வரவும் அவரை
”வாங்க வாங்க உள்ள வாங்க” என வரவேற்றார்.
”அட நீ உள்ள போய் பாருப்பா, நான் இருந்து எல்லாரையும் பார்க்கிறேன்” என கைலாசம் சொல்ல அதற்கு சிவசங்கரன்
”உங்க சொந்த பந்தங்கள் என் சொந்த பந்தங்கள் எல்லாம் உங்களுக்கு தெரியும் ஆனா, என் நண்பர்கள் பிசினஸ்ல தெரிஞ்சவங்க எல்லாரும் வருவாங்களே அவங்களை நான் இருந்து வரவேற்கிறேனே“
”அட என்னப்பா நீ, சென்னைக்காரங்களை முகத்தை பார்த்தே நான் கண்டுபிடிச்சிடுவேன், உன் சார்பா நான் வரவேற்கிறேன் யாராவது கேட்டாலும் பொண்ணோட அப்பாவுக்கு மேடையில வேலையிருக்குன்னு சொல்லி சமாளிக்கிறேன், நீ போப்பா என் தங்கச்சி வேற அங்க கால்ல சக்கரம் கட்டிக்கிட்டு சுத்தறா, பார்க்கற எனக்கே கண்கலங்குது, இப்படியா நான் அவளை வளர்த்தேன், நீங்கல்ல இருந்து அவளை பார்த்துக்கனும் அதை விட்டுட்டு இப்படி நீங்க தனியா