இருக்கீங்களே அவள் ரொம்ப கஷ்டப்படறா அவளுக்கு துணையா போய் உதவுங்களேன்” என சொல்ல சிவசங்கரனோ சிரித்தார்
”அவள்கூட நான் இருந்தாலும் அவள் இப்படிதான் ஓடுவா, பொண்ணு கல்யாணமாச்சே அதுல உற்சாகமா இருக்கறா“
“நீங்க ஒண்ணு மாப்பிள்ளை, பொண்ணுக்கு கல்யாணம்னதும் காலையில இருந்து புலம்பிட்டா, நான்தான் அவளை சமாதானம் பண்ணிட்டு வந்தேன், நீங்களும் அவளுக்கு ஆறுதல் சொல்லாம இருந்தா எப்படி”
”இதுவேறயா சரி நான் போய் பார்க்கிறேன் நீங்க எல்லாரையும் பாருங்க“
“நான் பார்த்துக்கறேன் நீ போப்பா” என சொல்ல அவரும் உள்ளே சென்றார்
சென்னையை விட்டு வரும் போதே தனது சொந்த பந்தங்களையும் அழைத்து வந்திருந்தார் சிலர் அவர்களிடம் இருந்த கார்களில் வந்தார்கள், சிலரை அவரே பஸ் ஏற்பாடு செய்து அழைத்துக் கொண்டு வந்தார்.
அந்த மண்டபமே நிரம்பி வழிந்தது. முக்கால் வாசி பெண் வீட்டார்களே இருந்தார்கள், திருமணத்தை மாப்பிள்ளையின் வீம்பு காரணமாகவே சென்னையில் வைக்காமல் மதுரையில் வைத்தார் சிவசங்கரன் ஆனால் மாப்பிள்ளை வீட்டு சார்பாக கால்வாசி ஆட்கள்தான் வந்திருந்தனர். அதைக் கண்டுக் கொள்ளாமல் அவரின் சொந்த ஊரில் தன் மகளின் திருமணத்தை தடல்புடலாக நடத்தினால் அனைவரின் பாராட்டும் கிடைக்கும், முக்கியமாக சம்யுக்தா சாதாரணமானவள் அல்ல அவளுக்கு பின்னால் யார் யார் இருக்கிறார்கள் என தெரிந்துக் கொண்டு அவளிடம் பக்குவமாக நடந்துக் கொள்வார்கள் மாப்பிள்ளை வீட்டார் என நம்பினார்.
அங்கு மணமகள் அறையிலோ சம்யுக்தா ரெடியாகிக் கொண்டிருந்தாள். அவளுக்காக ஒன்றரை லட்சத்தில் பட்டுப்புடவையை சிவசங்கரனே காஞ்சிபுரத்தில் இருந்த பிரபலமான தறி நெய்பவர்களிடம் சொல்லி ஆர்டர் செய்து வரவழைத்திருந்தார். அந்த புடவையைதான் அவள் அணிந்திருந்தாள். ஸ்டோன்ஸ் பதித்து அழகான இளம் சிவப்பும் மாம்பழ நிறமும் கலந்த பட்டுப்புடவையில் அதுவும் வெளிச்சத்தில் இரண்டு விதமாக நிறம் மாற்றத்தை தரக்கூடியபடி