அருகில் ஒலித்த குரலினால் காந்தமாக அவளை இழுத்துக் கொண்டிருந்த அவனின் பார்வையை விட்டு கண்களை திருப்பினாள் தேன்மொழி.
நான்காம் மாடி வந்து விட்டதை நினைவுப் படுத்தியவளுக்கு நன்றியை ஒரு புன்னகையின் மூலம் தெரிவித்து விட்டு, அவசரமாக லிஃப்டில் இருந்து வெளியேறினாள்.
அந்த ‘அவனும்’ அவளைப் போலவே தாமதமாக உணர்வுப் பெற்று வெளியே வந்தான்.
"ஜி.எம் ரூம் இந்த ஃப்ளோர் தான் சத்யா..."
காதில் விழுந்த அந்த பெயரிலும், அதை சொன்ன பெண் குரலிலுமாக, திரும்பிப் பார்த்தாள் தேன்மொழி.
அவன், அது தான் அந்த ‘சத்யா’வின் அருகில் நடந்தப் படி பேசிக் கொண்டிருந்தாள் ஒரு பெண்.
தேன்மொழிக்கு அவளையும் மீறி சற்றே பொறாமை தலை தூக்கியது. அவனுக்கு திருமணமாகி விட்டதா???
✽✽✽
“வெல்கம் மிஸ்டர் சத்யா!”
அந்த கம்பெனியின் ஜெனரல் மேனேஜர் முருகன், சத்யாவை மனதார வரவேற்றார்.
“தேங்க்ஸ் மிஸ்டர் முருகன்.”
“லைட்டா ப்ரேக்ஃபாஸ்ட் சாப்பிட்டுட்டு ப்ரசென்டேஷன் ஸ்டார்ட் செய்வோமே. எல்லாமே ரெடியா இருக்கு...”
சத்யாவின் கவனம் எதிரே இருந்தவரிடம் இல்லாமல் அவர்களுக்கு சற்று தொலைவில்