(Reading time: 6 - 11 minutes)
Endrendrum unnudan
Endrendrum unnudan

   

அதற்கு மேல் அங்கே நின்று அவனுடன் பேச மனம் வராமல்,

   

“சரிங்க கமல் சார்... அம்மாவை பத்திரமா பார்த்துக்கோங்க... எனக்கு வீட்டுல கொஞ்சம் வேலை இருக்கு,” என்று சொல்லி விட்டு உடனே திரும்பி நடந்தாள்...

   

அங்கிருந்து நேரே ஹேமாவின் முன் சென்று நின்ற சுமித்ராவிற்கு, தோழியிடமும் எதையும் பற்றி பேச மனம் வரவில்லை...!

   

எதை வைத்து கமலுக்கு மனதினுள் இடம் கொடுத்தாள் அவள்...

   

கமலை பற்றி அவளுக்கு என்ன தெரியும்???

   

ஹேமா சொன்னதை வைத்துப் பார்த்தால் அவன் முன்கோபக்காரன்... பாசம், பரிவு காட்டாதவன்... பல பல பொறுப்புகள் உள்ளவன்...

   

அவ்வளவு தான் தெரியும்....!

   

அவள் நினைப்பதுப் போல அவன் பாசமுள்ளவன் என்றாலும் கூட, அவன் நல்லவனா, பண்புள்ளவனா, தீய பழக்கங்கள் இல்லாதவனா.... எதுவுமே அவளுக்கு தெரியாது...!

   

தன்னை தானே திட்டிக் கொண்ட சுமித்ரா, வலது கையால் தன் மண்டையிலேயே ஒன்று போட்டுக் கொண்டு, “நீ இவ்வளவு லூசா மாறுவேன்னு நினைக்கவே இல்லை சுமி...” என்றும் சொல்லிக் கொண்டாள்.

   

அப்போது தான் கன்னத்தில் கை வைத்து சத்தமில்லாமல் அவளையே பார்த்து சிரித்துக் கொண்டிருந்த ஹேமா அவளின் கவனத்தில் பட்டாள்...

   

தானாக வெட்கம் மேலிட... “ஹி ஹி ஹி...” என ஓர் அசட்டு சிரிப்பை சுமித்ரா தர,

   

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.