“போதும் சுமி... ஆல்ரெடி நீ கொடுத்த என்டர்டெயின்மென்ட்டே இன்னைக்கு முழு நாள் என்னை காப்பாத்திடும்... சிரிச்சு எல்லாம் பயமுறுத்த வேண்டாம்...” என்றாள் ஹேமா.
மீண்டும் ஒரு அசட்டு சிரிப்பை கொடுத்து விட்டு வீட்டிற்கு சென்றாள் சுமித்ரா.
அடுத்து சில நாட்கள் அவள் ஹேமாவின் கிளினிக் பக்கமே போகவில்லை...
அவளை மனதை ஆக்கிரமித்திருந்த கமலை மறக்க ஏதேதோ முயற்சி செய்துக் கொண்டிருந்தாள்...
புதிய சமையல் செய்தாள்.... தூசியாக இருந்த பரணை சுத்தம் செய்தாள்... வீட்டில் இருந்த பொருட்களை இடம் மாற்றி வைத்தாள்...
ஹுஹும்... என்ன செய்தாலும் கமல் அவள் நினைவை விட்டு செல்ல மாட்டேன் என்று அடம் பிடித்தான்...
எத்தனை வேலை செய்தாலும்... எவ்வளவு டையர்டாக இருந்தாலும்... இரவு படுக்க சென்றால் தானாக கமலின் நினைவு வந்து நின்றது! முதல் முறை அவனை பார்த்த போது ஆச்சர்யத்துடன் நிமிர்ந்து பார்த்த அவனின் முகமும், பார்வையுமே அவளின் கண் முன் வந்து நின்றது...
எப்படி அவனை மறக்க போகிறாள்???? சுமித்ராவிற்கு மலைப்பாக இருந்தது!
❀✿❀✿❀✿
ஒரு வாரம் மெல்ல ஓடி செல்ல, சுமித்ராவை தேடி ஹேமாவே அவளின் வீட்டிற்கு வந்திருந்தாள்.
“என்னடி சுமி, ரொம்ப நாளா உன்னை ஆளையே காணோம்?”