(Reading time: 6 - 11 minutes)
Endrendrum unnudan
Endrendrum unnudan

“ரொம்ப நாளா? ஒரு வாரம் தானே ஆச்சு!” அலுப்புடன் பதில் சொன்னாள் சுமித்ரா.

   

“ஒன் வீக் என்னை மீட் செய்யாம இருக்குறது உனக்கு சாதாரண விஷயமா இருக்கு??? ஹ்ம்ம்... எத்தனை வருஷ ஃப்ரென்டா இருந்தா என்ன, காதலுக்கு முன்னாடி நாம எல்லாம் செகன்டரி தான்...”

   

இப்போது ஹேமா அலுத்துக் கொள்ள சுமித்ரா மறுத்து எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தாள்.

   

“அடிப்பாவி... பேச்சுக்கு கூட அதெல்லாம் இல்லைன்னு சொல்ல மாட்டீயா???”

   

“ப்ச்... போ ஹேமா... நீ வேற...!”

   

“சரிங்க சுமி! நான் வேற எதுவும் கேட்கலை... ஆனால் உன்னை பார்க்காம இன்னும் ஒருத்தர் நூடில்ஸ் ஆகிட்டு இருக்காரே, அவர் கிட்ட என்ன சொல்ல???”

   

சுமித்ரா விழிகளை விரித்து தோழியை பார்த்தாள்!!!

   

“கமலா ஹேமா??? நான் வரலைன்னு தேடுனாரா??? உனக்கு எப்படி தெரியும்? உன் கிட்ட கேட்டாரா???”

   

“என்ன ஒரு நல்ல ஃப்ரெண்ட் நீ! நான் ஒருத்தி வீடு தேடி வந்து உன் கிட்ட கேட்டா, ச்சீ போன்னு சொல்வ... ஆனால்...”

   

வேண்டுமென்றே பேச்சை நிறுத்தி தோழியை பார்த்தாள் ஹேமா...

   

“இல்லைப்பா... அவர் அன்னைக்கு பேசினதை பார்த்தா...”

   

“பார்த்தா...?”

   

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.