தொடர்கதை - மலர்கள் நனைந்தன பனியாலே... - 27 - பிந்து வினோத்
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
துளசிக்கு நந்திதா அவளைப் பார்ப்பது புரிந்தாலும், புரியாதது போல காட்டிக் கொண்டு வேலையை தொடர்ந்தப் படி பேசினாள்.
“பாரேன், பெரிய தலைங்க எல்லாம் அப்படி தான் கல்யாணம் செய்திருக்காங்க... ஐஸ்வர்யா ராய்... ஷில்பா ஷெட்டி... சச்சின் டென்டுல்கர்.... நர்கிஸ்... காந்தி... ஏன் நம்ம ஜெனிபர் அனிஸ்டன் கூட முன்னாடி அப்படி தான்...”
நந்திதா இப்போது படு சீரியஸாக துளசியை பார்த்து முறைத்தாள்.
“என்னடி முறைக்குற? ஏதாவது தப்பா சொல்லிட்டேனா???”
“இப்போ எதுக்கு உனக்கு இந்த ஆராய்ச்சி ஒசிமம்???”
“இது நல்லா இருக்கே!!! கொஞ்சம் முன்னாடி ஸ்பேஸ்க்கு மனுஷனை அனுப்ப போறாங்கன்னு கூட தான் பேசினோம்... அது மட்டும் நமக்கு ரொம்ப தேவையான விஷயமா? ஆமாம் இந்த டாபிக் பேசினால் உன் கிட்ட ஏன் இப்படி ஒரு ரியாக்ஷன் வருது???”
“அது... நாம ஏன் வெட்டியா பேசனும்னு தோணிச்சு... ISRO பத்தி எல்லாம் பேசினால் ஜி.கே வளரும்... “
“இனிமேல் நாம இரண்டு பேரும் ஜி.கே இம்ப்ரூவ் செய்றது ரொம்ப முக்கியம் தான்...”
“அதை விடு ஒசிமம்... நம்ம ஃப்ரென்ட்ஸ் கெட்-டு-கெதர் ஒன்னு ப்ளான் செய்வோமா??? இன்னைக்கு காலேஜ் போனப்போ நம்ம செட் ஒவ்வொருத்தர் ஞாபகமும் வந்துச்சு.... அருணா, மனுஜா, அபி...”
“கெட்-டு-கெதருக்கு என்ன, எப்போ வேணா அரேஞ் செய்யலாம்.... ஆனால் ஒரு ஃபங்ஷனுக்குன்னு எல்லோரும் ஒன்னா கூடினால் அது ரொம்ப ஸ்பெஷல்ல.... நீ கல்யாணத்துக்கு ஓகே சொல்லு... உன் கல்யாணத்துக்கு அவங்க எல்லோரையும் வர சொல்லிடுவோம்...”