(Reading time: 5 - 10 minutes)
Malargal nanainthana paniyale
Malargal nanainthana paniyale

   

“க்கும்... இதெல்லாம் உனக்கே ரொம்ப ஓவரா தெரியலை...”

   

“இல்லை.... எனக்கு என்னவோ உனக்கு சீக்கிரம் கல்யாணம் நடக்க போகுதுன்னு தோணுது...”

   

“ஓ, புதுசா ஜோசியம் வேற சொல்ல ஆரம்பிச்சுட்டீயா!!!! நடத்தும்மா நடத்து.... ஆமாம் அது ஏன் உனக்கு அப்படி தோணிச்சு???”

   

“அது என்னவோ தெரியலை நந்து... நீ உதய் கிட்ட பேசிட்டு இருந்தப்போ என்னவோ தோணிச்சு...”

   

நந்திதா மீண்டும் திகைத்து துளசியை பார்த்தாள்... ஆனால் துளசி முகத்தில் சின்ன புன்னகை தவிர வித்தியாசமாக எதுவுமில்லை...

   

“ம்ம்ம்.... சரி... ” என்றாள் நந்திதா அமைதியாக...

   

“அதை விடு நந்து... நாலு நாளைக்கு சேர்த்து இரண்டு பேரும் இன்னைக்கு ரொம்ப வேலை செய்துட்டோம்... மீதியை நாளைக்கு பார்க்கலாம்... வா உள்ளே போகலாம்....”

   

மறுபேச்சு சொல்லாமல் சரி என ஏற்றுக் கொண்டாள் நந்திதா. ஆனால் அவளின் மனதில் மட்டும் சின்ன சலனம்...

   

உதய் அவளை மொபைலில் அழைத்தது முதலே ஏற்பட்டிருந்த சலனம்...

   

❀✿❀✿❀✿

   

“குட் மார்னிங்... இந்தாங்க உங்க காஃபி...”

   

ப்ரியா கொடுத்த காஃபியை வாங்கிக் கொண்டு, “தேங்க்ஸ்... அம்மா எங்கே?” எனக் கேட்டான் உதய்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.