(Reading time: 5 - 10 minutes)
Malargal nanainthana paniyale
Malargal nanainthana paniyale

நீன்னு பேசுறவரை கேலி செய்தாலும் தப்பில்லை...”

   

உதய் ப்ரியாவை சுவாரசியத்தோடு பார்த்தான்...

   

“உங்களுக்கு மரியாதை வேற வேணுமா? சரிங்க பாட்டி...”

   

“அடடா, உங்களுக்கு கண்ணு சரியா தெரியாதா???? அதெல்லாம் நீங்க சொன்ன கன்னாபின்னா லிஸ்ட்ல இல்லையா???”

   

“ஹேய், என்ன நீ பெரிய வாயாடியா இருக்க! உன் நல்லதுக்காக சொன்னால் ரொம்ப ஓவரா பேசுற...”

   

“ஆமாம் நீங்க கம்மியா பேசுறீங்க....”

   

“இங்கே பார் மிஸ் வாயாடி, நீ ஒரு விஷயம் தெரிஞ்சுக்கோ, இந்த ஹீரோ உதய் ஆல்ரெடி கமிட்டட்... என்ன ஆனாலும் அவைலபிள் ஆக மாட்டான்... ஸோ, அம்மா பேச்சை கேட்டு உன் டைமை வேஸ்ட் செய்யாம வேற உருப்படுற வேலையை பாரு...”

   

ப்ரியா புன்னகை மாறாமல் அவனை பார்த்து, “தேங்க் யூ...” என்றாள்.

   

“தேங்க்ஸ் எதுக்கு சொல்ற?? ஓ, சாரி சாரி... சொல்றீங்க மேடம்?”

   

“வேற எதுக்கு சொல்வாங்க, உதவி செய்தவங்களுக்கு தான் நன்றி சொல்வாங்க...”

   

“ஹலோ! உனக்கு நான் என்ன ஹெல்ப் செய்தேன்?”

   

“நான் கேட்காமலே எனக்கு வேண்டிய தகவல் கொடுத்தீங்களே!”

   

“என்ன தகவல்?”

   

“நீங்க கமிட்டட்ன்னு சொன்னீங்க...”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.