Chillzee Originals : தொடர்கதை - என்றென்றும் உன்னுடன்... - 13 - பிந்து வினோத்
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
“ஏன் அப்படி நினைச்சீங்க? எந்த அம்மாவும்...”
சுமித்ரா மனதில் இருந்த கேள்வியை முழுவதுமாக சொல்லி முடிக்கும் முன் குறுக்கிட்டு பேசினான் கமல்.
“தெரியும் சுமி, எந்த அம்மாவும் அப்படி பிரிச்சு பார்க்க மாட்டாங்க தான்... ஆனால் பத்து வருஷம் மேல அங்கே இல்லாத நான், வீட்டுக்கு திடீர்னு வந்ததை தம்பி, தங்கையால இயல்பா எடுத்துக்க முடியலை... அவங்களை பொறுத்த வரை நான் ஒரு வெளியாள் மாதிரி தான்... அவங்க அம்மாவோட அன்பை என்னோட பங்கு போட்டுக் கொள்வதில் அவங்களுக்கு விருப்பமில்லை... அதனால, நானே தள்ளி நிக்க பழகி கிட்டேன்...”
“ஓ...”
“அப்புறம் அப்பாக்கு வேண்டாத ஃப்ரென்ட்ஸ் சகவாசம் வந்து, குடி பழக்கம் வந்துச்சு... அவர் பழக்கத்தால வேலையும் போச்சு... விமல்க்கு விபரம் போதாது, ரொம்ப செல்லம்... கவிதா சின்ன பொண்ணு... அப்புறம், வேற என்ன செய்றது, நானே எல்லாம் எடுத்து செய்ய வேண்டியதா போச்சு... யாருமே என்னை நீ செய்ன்னு சொல்லலை... நானா அந்த பொறுப்புகளை எடுத்துக்கிட்டேன்... விமலை கண்டிச்சு வளர்த்து இப்போ ஓரளவுக்கு நல்ல நிலைமைக்கு கொண்டு வந்திருக்கேன்... கவிதாவையும் அதே போல நிலைமைக்கு கொண்டு வரணும்...”
“நீங்க ரொம்ப நல்லவர் கமல்...”
“சுமி?”
“வயசுல மட்டும் தான் நீங்க சின்னவர்... ஆனால் மனசுல ரொம்ப உயர்ந்தவர்... பன்னிரெண்டு வயசில இருந்து விட்டுக் கொடுத்து, அடுத்தவங்களுக்காகவே வாழ்ந்து... கிரேட் கமல்...!!!! இப்படி ஒரு பொக்கிஷம் கிடைக்கும் போது நான் பணம், வசதி பெரிசுன்னு நினைச்சு விட்ருவேன்னு நினைக்குறீங்களா???”