(Reading time: 7 - 13 minutes)
Endrendrum unnudan
Endrendrum unnudan

திருமணமான புதிதில் பூங்கோதையும் சரி, கவிதாவும் சரி அவளிடம் இருந்தும் விலகியே இருப்பார்கள்... சில சமயம் மனம் நோகுவது போல ஏதாவது பேசவும் செய்வார்கள்...

   

ஆனால் சுமித்ரா அவர்களிடம் அன்பாகவே நடந்துக் கொண்டாள்... அவளின் வாடிக்கையான குறும்புத்தனத்தை கூட அவர்களிடம் காட்டியதில்லை...

   

கமல் அதிகமாக அன்பு வைத்திருப்பவர்கள்... அவர்களிடம் தானும் அன்பு வைக்க வேண்டும் என்பதையே மனதில் வைத்து செயல் படுத்தினாள்...

   

மெல்ல அவர்களும் அவளின் அன்பில் உருகி தான் போனார்கள்...

   

சரவணனும், விமலும் கூட அப்படியே தான்...

   

இன்று, பூங்கோதை, கவிதா இருவருமே அவளுக்கு உறவினர் என்று இல்லாமல் நல்ல தோழிகள் போல மாறி இருந்தார்கள்.

   

ஆனாலும் கமலை ‘ஹிட்லர்’ என சொல்லி அவர்கள் யாரேனும் பேசும் போது, சுமித்ராவிற்கு கோபமாக வரும்...

   

அவர்களிடம் எதையும் சொல்லா விட்டாலும், கமலிடம் சொல்லி புலம்புவாள்...

   

“நீங்க செய்றதெல்லாம் தெரியாம கவிதா மட்டும் இல்லை, அத்தை கூட உங்களை ஹிட்லர்ன்னு சொல்றாங்க... எனக்கு பிடிக்கலை...”

   

“சொல்லிட்டு போகட்டும் விடு சுமி...”

   

“என்ன இவ்வளவு ஈஸியா சொல்லிட்டீங்க? என் கமலை அப்படி எல்லாம் சொன்னா எனக்கு பிடிக்காது.... பேசாம அவங்க கிட்ட மனசு விட்டு பேசுங்க கமல்...”

   

“வேண்டாம் சுமி... எல்லோரும் வருத்தப் படுவாங்க... அன் ஈஸியா இருக்கும்... யாரும் 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.