“சுமி, யோசிச்சு...”
அவனின் உதடுகளை கையால் மூடிய சுமித்ரா,
“யோசிக்க ஒன்னும் இல்லை... எனக்கு உங்களை ரொம்ப பிடிச்சிருக்கு... உங்களை மட்டும் தான் பிடிச்சிருக்கு... உங்க கிட்ட மத்தவங்க கொடுக்காம நிலுவையில இருக்க மொத்த அன்பையும் கொட்டி கொடுக்க நான் இருக்கேன்...” என்றாள்...
அவளின் குரல் நெகிழ்ந்து ஒலித்தது...
அவனின் உதடுகளை மூடி இருந்த விரல்களை கையில் ஏந்திய கமல், மெல்ல மென்மையாக அதில் முத்தமிட்டான்...
“தேங்க்ஸ் சுமி... இந்த உலகத்திலேயே அதிர்ஷ்டசாலி நான் தான்...”
அதன் பின் விஷயங்கள் வேகமாக நடந்தன...
திருமண நாள் நிச்சயிக்கப் பட்டு சுமித்ரா, கமலின் திருமணம் வெகு விமரிசையாக நடைப் பெற்றது...!
கவிதாவின் படிப்பை காரணம் காட்டி கமல் உடனே குழந்தை வேண்டாம் என்று சொன்னதை கூட முழு மனதாக ஏற்றுக் கொண்டாள் சுமித்ரா...
❀✿❀✿❀✿
“சுமி.... சுமி... ஹேய் தூங்கு மூஞ்சி சுமி...”
ஹேமாவின் குரல் கேட்டு கண் திறந்து பார்த்தாள் சுமி...
“ஹேய் கும்பக்கர்ணி... இப்படியா தூங்குவ? எழுந்திரு...”