Chillzee Originals : தொடர்கதை - எங்கேயோ பார்த்த மயக்கம் - 05 - பிந்து வினோத்
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
இரண்டு நிறுவனங்களுக்கும் இடையே ஆன பேச்சு வார்த்தை முடிந்து ஒப்பந்தம் கையெழுத்தானது. முருகன் அங்கிருந்த அவர்களின் அலுவலகத்தையும், தொழில் கூடத்தையும் சத்யாவிற்கும், சங்கீதாவிற்கும் சுற்றிக் காட்டினார். அப்படியே, அங்கே பணிப் புரிபவர்களில் முக்கியமானவர்களையும் அவர்களின் வேலை இடத்தை கடக்கும் போது அறிமுகப் படுத்தி வைத்தார்.
அப்போது தேன்மொழியையும் அவர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார். சங்கீதா தேன்மொழியுடன் கை குலுக்க, சத்யா புன்னகைத்தான்! தேன்மொழியும் பதிலுக்குப் புன்னகைத்தாள்.
அவர்கள் இருவர் கண்களும் மீண்டும் சந்தித்துக் கொண்டன... ஆனால் உடனேயே தயக்கத்துடன் வேறு பக்கம் திரும்பிக் கொண்டன!
✽✽✽
மாலையில் வீடு செல்ல கிளம்பிய தேன்மொழி, கண்மணிக்காக வரவேற்பறையில் காத்திருந்தாள்.
காலையில் சத்யாவை பார்த்தது முதலே அவளின் மனம் நிலைக் கொள்ளாமல் அலைப்பாய்ந்துக் கொண்டிருந்தது...
அவனிடம் நேரடியாக பேசி ஒரு ‘சாரி’ சொல்ல வேண்டும் என்ற ஆவல் இப்போதும் இருந்துக் கொண்டே தான் இருந்தது...
அப்போது சங்கீதா அந்தப் பக்கமாக வந்தாள்...
தேன்மொழியைப் பார்த்து நட்புடன் புன்னகைத்தாள்.
"ஹலோ, நீங்க தேன்மொழி தானே? உங்க ஜி.எம் உங்களைப் பற்றி ரொம்ப புகழ்ந்தார். ஆண்கள் அதிகம் வேலை செய்யும் இந்த இடத்தில் நீங்க இப்படி ப்ரொடக்ஷன் மேனேஜராக