(Reading time: 6 - 11 minutes)
Engeyo partha mayakkam
Engeyo partha mayakkam

இருப்பது ரொம்ப பெரிய விஷயம்ங்க..."

   

சங்கீதாவின் புகழ்ச்சியை அடக்கத்துடன் ஏற்றுக் கொண்டாள் தேன்மொழி.

   

"நீங்க சொல்லும் அளவிற்கு எல்லாம் இது பெரிய விஷயம் இல்லை... இப்போ எல்லாம் எல்லா கம்பெனியிலும் எல்லா நிலையிலும் பெண்கள் இருக்காங்க..."

   

“அதென்னவோ கரக்ட் தான் தேன்மொழி....”

   

தேன்மொழிக்கு சங்கீதாவை பற்றி அறிந்துக் கொள்ளும் ஆவல் எழுந்தது. ஆனால் மரியாதை நிமித்தம் கேள்வி எதுவும் கேட்காது அமைதியாக இருந்தாள். சங்கீதாவே பேச்சை தொடர்ந்தாள்.

   

"நீங்களும் என்னைப் போல யாருக்கோ வெய்ட் செய்றீங்க போல இருக்கு?"

   

"ஆமாம், என் ஃப்ரெண்ட் கண்மணி வரேன்னு சொன்னாங்க... அவங்களை ட்ராப் செய்யனும்... அவங்களுக்காக வெயிட் செய்றேன்..."

   

"ஒ! நானும் லிஃப்ட்க்காக தான் வெயிட்டிங்..."

   

"ஏன்? உங்களுக்கு கார் எதுவும் அரேன்ஜ் செய்யலையா??? நான் வேணா முருகன் சார் கிட்ட கேட்டுப் பார்க்கவா???"

   

"இல்லை தேன்மொழி... வேண்டாம் வேண்டாம்...! நான் சத்யா கூடவே போயிருக்கலாம், ஆனால் இன்னைக்கு வெள்ளிக் கிழமை ஆச்சே! நானும் என் கணவரும், ஜாலியா வெளியே சுத்திட்டு, லேட்டா வீட்டுக்கு போவோம்... அதனால தான் சத்யாவை எனக்காக காத்திருக்காமல் கிளம்ப சொன்னேன்..."

   

தேன்மொழியின் முகத்தில் புதிதாக எந்த உணர்ச்சியும் தோன்றவில்லை... ஆனால் அதுவரை சற்றே டல்லாக இருந்த அவளின் முகம் லைட் ஸ்விட்ச் போட்டதும் எரியும் விளக்கைப் போல பிரகாசித்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.