(Reading time: 6 - 11 minutes)
Engeyo partha mayakkam
Engeyo partha mayakkam

   

மஞ்சரி மனதுள் ஆச்சர்யப் பட்டாள். 

   

சில நிமிடங்களுக்கு முன்பு தான், கிட்டத்தட்ட மூன்று வருடத்திற்கு பிறகு ஈஸ்வரி ஃபோனில் அழைத்துப் பேசி இருந்தார். இப்போது தேன்மொழியும் சத்யாவைப் பற்றி பேசுகிறாளே!

   

எதையும் காட்டிக் கொள்ளாமல், "ஏன் தேன்மொழி?" என மட்டும் வினவினாள் மஞ்சரி!

   

"இல்லை... அவர் ஏன் இன்னும் கல்யாணம் செய்துக்கலை?"

   

"தெரியலையே தேன்மொழி! ஆமாம், அவனுக்கு கல்யாணம் ஆகலைன்னு உனக்கு எப்படி தெரியும்?"

   

இப்போது தேன்மொழியின் மனதிலும் அந்த கேள்வி பிறந்தது. 

   

சங்கீதா சத்யாவின் மனைவி இல்லை என்பதற்காக அவனுக்கு திருமணமாகவில்லை என்று எப்படி சொல்ல முடியும்? 

   

அவளின் முகத்தில் தோன்றிய குழப்பத்தை கவனித்த மஞ்சரி,

   

"என்ன விஷயம் தேன்மொழி? இது வரைக்கும் நீ என் கிட்ட எதையும் மறைச்சதில்லையே, சொல்லு ஏன் இப்போ திடீர்னு சத்யா பற்றிய பேச்சு?" என்றுக் கேட்டாள்.

   

மஞ்சரி சொல்வது நிஜம், சொந்த அண்ணன் பிரமோத்தை விட தேன்மொழிக்கு மஞ்சரி தான் நெருக்கம். 

   

ஒரு சில வினாடிகள் தயங்கி விட்டு, அன்று சத்யா அவளின் அலுவலகம் வந்திருந்ததையும், அவனை சந்தித்ததையும் சொன்னாள்.

   

"சரி, அதெல்லாம் இருக்கட்டும் தேன்மொழி... அவனுக்கு கல்யாணம் ஆனால் உனக்கு என்ன, 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.