Chillzee Originals : தொடர்கதை - மாலையில் யாரோ மனதோடு பேச... - 06 - பிந்து வினோத்
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
புரிகின்றது என்று தலை அசைத்த சரண்யா, தயக்கத்துடன்,
“என் மகளை ஸ்கூல்ல விட்டுட்டு வரணும்... எய்ட்டோ க்ளாக் கொஞ்சம் கஷ்டம்...” என்றாள்.
“ஸீ சரண்யா, ஆஃபிஸ் வேற வீடு வேற... உன் வீட்டு பிரச்சனைக்கு நான் ஒன்னும் செய்ய முடியாது... யூ நீட் டு தின்க் அண்ட் ப்ளான் ஃபார் இட்! லெட்ஸ் சேன்ஜ் தி சப்ஜக்ட்... ஒரு பத்து மணி போல ப்ரொடக்ஷன் லைனுக்கு போகலாம்... அங்கே நடக்குறது எல்லாத்தையும் எனக்கு எக்ஸ்ப்ளெயின் செய்யனும்... ஐ வான்ட் டு நோ ஆல் தி டீடெயில்ஸ்.”
மித்ரனின் ‘ஐ டோன்ட் கேர்’ அடிட்ட்யூடை ஜீரணிக்க முயன்றபடி, சரி என தலையை ஆட்டினாள் சரண்யா... இவனிடம் வேறு என்ன சொல்வது???
“யூ கேன் கோ நவ்....” என்ற மித்ரன், உமா பக்கம் பார்த்து,
“எங்கே ஸ்டாப் செய்தேன்?” என்றான்.
“எக்ஸ்க்யூஸ் மீ,” என்று குறுக்கிட்ட சரண்யா, மித்ரன் அவள் பக்கம் பார்க்கவும்,
“எனக்கு ஒரு டெஸ்க் வேணும்,” என்றாள்.
“உமா டேபிள் பக்கத்திலேயே கந்தசாமி கிட்ட ஒரு டேபிள் ரெடி செய்ய சொன்னேன்... த்ரீ மன்த்ஸ்க்கு தானே... தட் ஷுட் டூ,” என்றான் மித்ரன் வேண்டா வெறுப்பாக!
“தேங்க் யூ...” என்று மட்டும் சொல்லி விட்டு எழுந்துக் கொண்டாள் சரண்யா.
அந்த அறையை விட்டு வெளியே வந்த போது, சரண்யாவிற்கு சிங்கத்தின் குகையில் இருந்து வெளி வந்த ஒரு உணர்வு ஏற்பட்டது...
ஏன் மித்ரனை சந்திக்கும் போதெல்லாம் வனவிலங்குகளின் நினைவு வருகிறது???