Chillzee Originals : தொடர்கதை - என் மேல் உன்றனுக்கெத்தனை அன்படி - 11 - சசிரேகா
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
அவளோ சித்தனை பார்க்க அவனோ கையில் ஒரு சின்ன பரிசு பொருளை வைத்திருந்தான்
”இது உங்களுக்குதான் ஹாப்பி மேரிட் லைவ்” என்றான் சித்தன் அதைக்கேட்டு அவள் கோபத்தில் பொங்க அங்கு கூட இருந்த இன்னொருவனோ சித்தனிடம்
”சித்தா கல்யாணம் நின்னிடுச்சி, இதை இப்ப தரக்கூடாது, பாரு அவங்க கோபமா பார்க்கறாங்க” என சொல்ல அதில் சித்தனோ அமைதியாகிவிட அவளோ கோபமுடன் தில்லையை பார்த்தாள்
”நீ செஞ்சது தப்பு மாப்பிள்ளை சரியில்லைன்னு சொல்றதுக்கு நீயாரு மதுரை முழுக்க அவரை நல்லவன்னு சொல்லுது தெரியுமா”
”அது தப்பு அவன் நல்லவன் மாதிரி வேஷம் போடறான் அவனை நம்பாத”
”உன்னைதான் நான் நம்பியிருக்க கூடாது, முன்பின் தெரியாதவன்கிட்ட பத்திரிகை கொடுத்திருக்க கூடாது இல்லைன்னா எனக்கு கல்யாணம் ஆகியிருக்கும்”
”தப்பு நீ மட்டும் பத்திரிகை கொடுக்காம இருந்திருந்தா உன் வாழ்க்கையே அழிஞ்சிப் போயிருக்கும், இதுல இருக்கற மாப்பிள்ளை போட்டோவை பார்த்து சந்தேகப்பட்டு விசாரிச்சேன், அப்பதான் அந்த டாக்டரை பத்தி தெரிஞ்சது, அவன் மோசமானவன்னு தெரிஞ்சதும் உடனே உன்னை காப்பாத்த நினைச்சேன், அதுக்காகத்தான் இந்தக் கல்யாணத்தை நிறுத்தினேன். நிறுத்தினதுக்கான வழி என்னவோ தப்பாயிருக்கலாம் ஆனால், நான் உன் வாழ்க்கையை காப்பாத்தியிருக்கேன், நீ செஞ்ச உதவிக்கு நான் மறு உதவி செஞ்சி என்னோட நன்றிக்கடனை அடைச்சிட்டேன், எப்படியோ உன் வாழ்க்கை நாசமாகாம தப்பிச்சிதேன்னு நினைச்சி சந்தோஷப்படு”
”யாரு நீயா, நீயே ஒரு தாதா, பொறுக்கி, ரௌடி, கெட்டவன் அயோக்கியன், மோசமானவன்” என வரிசையாக அவள் திட்ட திட்ட அது ஏதோ பாராட்டு வார்த்தைகள் என எண்ணிக் கொண்டு சிரித்தபடியே சாப்பிட்டுக் கொண்டிருந்தான் தில்லை. அவளே திட்டி திட்டி ஒரு கட்டத்தில் ஓய்ந்துவிட்டாள்