”யாரு நானா நீதான் பிரச்சனை பண்ணி என் வாழ்க்கையை அழிச்சிட்டு இங்க உட்கார்ந்து நிம்மதியா சாப்பிடற“
”உனக்கு பசிக்குதா சொல்லு 4 தோசை சுட்டுத்தரேன் அதுக்கு ஏன் கத்தற”
”சீ வாயை மூடு, உன்னால என் குடும்பமே கலங்கிப் போயிருக்கு கல்யாணம் நிக்கவும் எங்கப்பாவுக்கு”
”ஹார்ட் அட்டாக் வந்து ஆஸ்பிட்டல்ல சேர்த்து ஆப்ரேஷன்கூட நடந்து முடிஞ்சிடுச்சி, அவர் கண் விழிக்க டாக்டர்கள் 12 மணி நேரம் டைம் கொடுத்திருக்காங்க எல்லாம் எனக்குத் தெரியும், மண்டபத்தில என் ஆளுங்க இருக்காங்க அதாவது அந்த ஊர்ல இருக்கற என் ஆளுங்க இருக்காங்க, அவங்க எல்லாம் பார்த்து நேரத்தோட என்கிட்ட சொல்லிட்டாங்க கூடவே ஆஸ்பிட்டல்ல உங்கப்பாவுக்கு ஆப்ரேஷன் பண்ணதும் எனக்கு தெரிஞ்ச டாக்டர்தான், பிழைக்க வைச்சிட்டான், அவருக்கு ஒண்ணும் ஆகாது எங்க அவர் செத்துடுவாரோன்னு நினைச்சி பயப்படாத, அவர் உயிருக்கு நான் காரண்டி போ போய் உங்கப்பாவை பாரு போ அவர் கண் திறந்ததும் உன்னைதான் கேட்பாரு, நீ அங்க போற வரைக்கும் என் ஆளுங்க உன் குடும்பத்தை கவனமா பார்த்துக்குவாங்க, என்ன அவங்க என் ஆளுங்கன்னு அங்க இருக்கிற யாருக்கும் தெரியாது அவ்ளோதான்”
”எங்களை வேவு பார்க்க ஆளுங்களை வைச்சிருக்கியா அப்படின்னா நான் அங்கிருந்து வந்தது கூட உனக்குத் தெரியுமா“
”ஓ தெரியுமே உன் வண்டி பின்னாடியே என் ஆள் வண்டியும் வந்துச்சி பார்க்கலையா நீ”
”பார்க்கலை”
”இங்க வந்ததும் உன்னைத் தேடி ஆட்டோக்காரன் நீ கூப்பிடாமயே வந்தானே கவனிக்கலையா நீ“
“அப்ப அந்த ஆட்டோ டிரைவர் கூட உன் ஆளா“