(Reading time: 8 - 15 minutes)
En mel undranukkethanai anbadi
En mel undranukkethanai anbadi

சொல்றேனே அப்படியா சரி சரிடா வை போனை இங்கயே பஞ்சாயத்து ஒண்ணு ஓடுது, அதைப்பத்தி விவரமா அப்புறமா சொல்றேன் இல்லைல்ல பிரச்சனை எதுவும் இல்லை நானே பார்த்துக்கறேன் ஓகே ஓகே வை வை” என போனை வைத்துவிட்டான் தில்லை. 

   

அவன் பேசி முடிக்கும் வரை அமைதியாக இருந்தாள் சம்யுக்தா, அவளின் அசாத்திய அமைதியைக் கண்ட தில்லையோ

   

”அவ்ளோதானா” என நக்கலாக கேட்க அவளோ முறைத்தாள்

   

”இதப்பாரு நான் சொல்றதுதான் உண்மை நம்பு” என தில்லை அமைதியாக சொல்ல அவளோ

   

”நீ சொல்றத நான் நம்பனுமா, நான் என்ன முட்டாளா இல்லை எங்கப்பாதான் விசாரிக்கலைன்னு நினைச்சியா நாங்க யார்ன்னு தெரியுமா உனக்கு, எங்கப்பா யார்ன்னு தெரியுமா உனக்கு” என பொங்கினாள் அதற்கு அவனோ

   

”அதான் பத்திரிகையில இருக்கே, உங்கப்பா பேரு சிவசங்கரன், சம்யுக்தா ஜவளிக்கடயையே வைச்சிருக்காரே, நேர்ல பார்க்கலைன்னாலும் நல்லவர்ன்னுதான் என் மனசு சொல்லுது ஆனா, அந்த டாக்டர் நல்லவன் இல்லை, உங்கப்பா அவ்ளோ தூரம் கெஞ்சியும் அவன் இறங்கலை, அதை விடு நான் மிரட்டினேன் அதனால உயிர் பயத்துக்காக அவன் போறான்னு வைச்சிக்கலாம் ஆனா, உன் அப்பா மயங்கி விழுந்தாரே அவன் ஒரு டாக்டர்தானே மனிதாபிமான அடிப்படையில கூட வந்து என்னாச்சின்னு பார்க்காம போறவனையா நீ நல்லவன்ங்கற, உன் மனசுக்கு அது தப்புன்னு தெரியலையா அவன் மோசமானவன் புரிஞ்சிக்க”

   

”உன் கேடு கெட்ட மனசுக்கு நல்லது கூட சொல்ல வருமா என்ன உன் புத்தியே கெட்ட புத்தி, கெட்டது மட்டும்தான் நீ பேசுவ“ என யுக்தா சொல்ல 

   

அவனோ அவளின் கோபத்தைக் கண்டு அதுவரை அவளிடம் அமைதியாக பேசிக் கொண்டிருந்தவன் இப்போது சாப்பிட்டு முடித்துவிட்டு அவளை உன்னிப்பாகப் பார்த்தான்

   

”இப்ப என்ன வேணும் உனக்கு, பிரச்சனை பண்ணனும்னு வந்திருக்கியா என்ன”

   

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.