”சிதம்பரத்துக்குள்ள வந்துட்டா நீ பார்க்கற எல்லாரும் என் ஆளுங்கதான், தானா உன்னைத் தேடி வருவாங்க, உதவி செய்வாங்க எல்லாம் என் மேல இருக்கற விசுவாசம்தான்”
”விசுவாசமா இல்லை பயமா எல்லாரையும் அப்படி மிரட்டிவைச்சிருக்க”
”அப்படியா” என கேட்டுச் சிரித்தான். அதைக் கண்ட அவளோ முறைத்தாள்.
அங்கிருந்தவனோ
”அண்ணா சாப்பிட்டியா”
”சாப்பிட்டேன் ஏன் கேட்கற”
“பின்ன நீ பாட்டுக்கு குண்டா குழம்பை கொண்டு வந்துட்டியே, நானும் என் சம்சாரம் குழந்தைகளும் என்னத்த சாப்பிடுவோமாம் கொடுண்ணா நான் வீட்டுக்குப் போறேன்”
”நான் சின்ன பாத்திரத்தில குழம்பு கேட்டேன், உன் பொண்டாட்டி தர முடியாதுன்னு ஆடினா, அதான் குண்டானோட கொண்டு வந்துட்டேன் தினமும் குழம்பு கேட்டா தருவாள்ல இன்னிக்கு ஏன் தரலை”
”ஏன்னா என்னத்த சொல்றது அவன் தம்பியைதானே நீ மதுரைக்கு அனுப்பிவிட்ட, அவனுக்காக ஆசையா சால்னா செஞ்சி வைச்சா”
”ஓஹோ அதான் கோபத்தில தரலையாக்கும், அவனை என்ன நான் கடல் கடந்து விரட்டியா விட்டேன், இங்கிருக்கற மதுரைக்குதானே அனுப்பினேன் எல்லாம் அங்க ஆஸ்பிட்டல்ல இருக்கறவர இவளோட அப்பா கண்விழிச்சதும் வந்துடுவான்னு போய் உன் பொண்டாட்டிகிட்ட சொல்லு, இந்தா எடுத்துக்கிட்டு போ சால்னாவை, என்னத்த செஞ்சாளோ உப்பில்லை உரப்பில்லை“ என குறை சொல்ல