தொடர்கதை - அமுத சுரபி - 09 - சசிரேகா
மறுநாள் பொழுது விடிந்தது, இரு வீட்டிலும் மயான அமைதி, அவரவர்கள் எழுந்தார்கள், குளித்தார்கள், ரெடியானார்கள், சமைத்து வைத்ததை சாப்பிட்டு அவர்கள் பாட்டுக்கு கிளம்பிச் சென்றார்கள் ஆனால் அந்த நால்வரின் மனதும் சுக்குநூறாக நொறுங்கியிருந்தது, குற்ற உணர்ச்சியில் தவித்தபடி தங்களது துணையை கூட ஏறிட்டுப் பார்க்க முடியாமல் சங்கடப்பட்டு விலகிச் சென்றார்கள்.
கம்பெனிக்கு வந்த பிரித்விக்கு வேலையே ஓடவில்லை, அதுநாள் வரை அமுதா அமுதா என்றே இருந்தான், நேற்று சுரபியைக் கண்டதிலிருந்து அமுதாவை நினைக்கவில்லை. அதே போலதான் வீரையனுக்கும் உடல்தான் கம்பெனியில் இருந்தது, மனம் முழுவதும் அமுதாவிடமே சென்றுவிட்டது
...
This story is now available on Chillzee KiMo.
...
”அண்ணா” என கொஞ்சம் சத்தமாக அழைத்தான், அப்போதும் அவன் கவனம் சிதறவில்லை. அதனால் அவனே பிரித்வியின் தோளை தட்டிவிட அதில் பிரித்வி உறக்கம் கலைந்து எழுபவன் போல உலுக்கி எழுந்தான், பயத்தில் முகமெங்கும் வியர்த்துக் கொட்டியிருந்தது, வீரையனை கண்டு நொந்துப் போனான்
”நீயா“
”நான்தான் அண்ணா“
“என்ன வேணும்”
”லீவுண்ணா”