அவளிடம் பதில் இல்லை!!!
பத்து மணி வரை வேறு வேலை இல்லாததால் மறுநாளை பற்றி யோசிக்க தொடங்கினாள் சரண்யா... நிஷாவை எப்படி பள்ளிக்கு அனுப்புவது???
அவள் யோசனையில் ஆழ்ந்திருக்க... ஒரு சில நிமிடங்களில் மித்ரன் அறையிலிருந்து வந்த உமா, நேரே சரண்யாவிடம் வந்து நின்றாள்.
“இங்கே நடக்குறது எல்லாம் பார்க்க கஷ்டமா இருக்கு மேடம்.”
சரண்யாவிற்கு உமா நினைப்பது புரிந்தது... உமாவின் முன்னிலையில் மித்ரன் அவளிடம் கடுமையாக பேசியது அவளுக்கும் கொஞ்சம் சங்கடமாக தான் இருந்தது.... ஆனால் என்ன செய்வது?
“விடு உமா... அவர் சொன்னதும் சரி தானே...”
“என்ன சரி... அப்படி கடு கடுன்னு எரிஞ்சு விழுறார்... உங்க கிட்டேயாவது கொஞ்சம் ஃபிளேக்ஸிபிலா இருக்கலாம்.”
“விடுப்பா! அது முடிஞ்சு போன விஷயம்... உனக்கு இந்த வேலை எவ்வளவு முக்கியம்னு எனக்கு தெரியும்... தேவை இல்லாமல் உன் புது முதலாளியை பகைச்சுக்காதே.”
உமாவின் முகத்தில் பயம், கவலை, வருத்தம், சங்கடம் என பல்வேறு உணர்ச்சிகள் கலவையாக தோன்றின.
உமாவின் மனநிலையை சரண்யாவால் புரிந்துக் கொள்ள முடிந்தது.
“அதிகமா யோசிக்காமல், அவர் டிக்டேட் செய்த லெட்டரை அடிச்சு கொடு... போ,” என்றாள்.
“ஓகே மேடம்,” என்று சொல்லிவிட்டு நகர்ந்தாள் உமா.