ஆகலைன்னா உனக்கு என்ன?"
இதற்கு என்ன பதில் சொல்வது? தேன்மொழி எதுவும் சொல்லவில்லை... மெளனமாக இருந்தாள்!
“சரி, நானே அந்த கேள்விக்கு பதில் சொல்றேன்... சத்யாவுக்கு இன்னும் கல்யாணம் ஆகலை...”
தேன்மொழியின் முகத்தில் சட்டென மலர்ச்சி தோன்றியது! அவளையே கூர்மையாக கவனித்துக் கொண்டிருந்த மஞ்சரியின் முகத்தில் சந்தோஷம் தோன்றியது!
"தேன்மொழி, என் கிட்டே மறைக்காமல் சொல்... உனக்கு சத்யாவைப் பிடிச்சிருக்கா?"
தேன்மொழியிற்கு குழப்பமாக இருந்தது.
"என்ன சொல்றதுன்னு தெரியலை அண்ணி, அவரை அப்போ வேண்டாம்ன்னு நான் தானே சொன்னேன்..."
"அதைப் பத்தி எல்லாம் நீ கவலைப் படாதே! உனக்கு அவனைப் பிடிச்சிருக்குன்னு உன் முகத்தை பார்த்தாலே தெரியுதே!!! நான் மேலே பேசிப் பார்க்கிறேன்..." என்றாள் மஞ்சரி மகிழ்ச்சியுடன்!
✽✽✽
மறுநாள் காலையில் தேன்மொழியை பார்த்ததும், “தேன்மொழி, வர்ற வெள்ளிக்கிழமை லீவு போடு...” என்றாள் மஞ்சரி.
மஞ்சரியை கேள்வியாகப் பார்த்து,
“லீவா? எதுக்கு அண்ணி?” என்றுக் கேட்டாள் தேன்மொழி.
“அதுவா.... சத்யான்னு பேரு இருக்க இளவரசர் ஒருத்தர், அவங்க அம்மாவோட வீட்டுக்கு