நிறைய வேலை இருக்கு”
“வேலையை தூக்கி போடு! முதல்ல உன் ஹெல்த்தை பாரு... பக்கத்திலேயே தான் இருக்கு இந்த மெடிகல் செண்டர்... நாளைக்கு போ.... நான் கொடுக்குற பேப்பரை கொடு... நான் அவங்க கிட்ட பேசிக்கிறேன்... பணம் எல்லாம் எதுவும் தர வேண்டாம்...”
“ஃப்ரீ சர்விஸா??? நடுத்துங்க மேடம்...”
“நான் சீரியஸா பேசிட்டு இருக்கேன்...”
“ஹேமா, நான் சொல்றதை கேளு... இந்த டெஸ்ட் எல்லாம் வேண்டாம்... எதவாது சிம்பிளா மருந்து கொடு போதும்...”
“தரேன்டி... அதுக்கு முன்னாடி ஒரு தடவை போய் டெஸ்ட் செய்திட்டு வந்திரு... எனக்கு என்னவோ எது...” என எதையோ சொல்ல தொடங்கிய ஹேமா, மனசை மாற்றிக் கொண்டவளாக,
“இங்கே பாரு, கேள்வி எல்லாம் கேட்காமல் நான் சொல்றதை செய்... அப்புறம் பேசிக்கலாம்...” என்றாள்.
“சரிடி... என்னைக்கு என்னை நீ ஃப்ரீயா விட்ருக்க... தேவையே இல்லாம எதையாவது செய்ய சொல்லு...”
சுமித்ரா புலம்ப, ஹேமா பதில் சொல்லாமல், தன் ப்ரிஸ்க்ரிப்ஷன் பேடில் சுமித்ராவிற்கு செய்ய வேண்டிய டெஸ்ட்டுகளை பற்றி எழுதினாள்...
அவளை ஒரு சில வினாடிகள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த சுமித்ரா, பின் பார்வையை திருப்பி சுவரில் மாட்டி இருந்த படங்களை பார்த்தாள்....
கண்கள் அங்கே இருந்தாலும், மனம் மீண்டும் தன் நினைவலைகளைத் தொடர்ந்தது...