“அவங்க ஃபோன் பேசிட்டு இருக்காங்க...”
“ஓகே...! உனக்கு வீடு பிடிச்சிருக்கா?”
“ம்ம்ம்ம்....”
“எவ்வளவு நாள் இங்கே தங்குறதா ப்ளான்?”
முகத்துக்கு நேராக கேட்கப்பட்ட சங்கடமான கேள்விக்காக பெரிதும் அலட்டிக் கொள்ளாமல், “ஏன் கேட்குறீங்க?” என்றாள் ப்ரியா.
“இல்லை அம்மா பத்தி எனக்கு தெரியும்... அவங்க ஏதாவது கன்னாபின்னான்னு சொல்லி வச்சிருப்பாங்க...”
“கன்னாபின்னான்னா??? அப்படி என்ன சொல்வாங்க?”
“என் உதய் மாதிரி யாருமில்லை... அவன் அழகன்... ரொம்ப நல்லவன்... பெரிய புத்திசாலி... சொந்தமா பெரிய கம்பெனி வச்சிருக்கான் இப்படி நிறைய...”
ப்ரியாவின் முகத்தில் புன்னகை எட்டி பார்த்தது...
“ஓஹோ இது தானா கன்னாபின்னான்னு பேசுறது?”
அவளின் கேள்வியில் இருந்த கேலியில் ஒரு வினாடி திகைத்த உதய், உடனே அதை மறைத்துக் கொண்டு,
“ஏதோ போனா போகுதுன்னு நல்லதுக்கு சொன்னா என்னையே கேலி செய்ற நீ???” என்றான்.
“நான் கேலி எதுவும் செய்யலை... ஆனால் முதல் முதல் ஒரு பொண்ணுக்கிட்ட பேசும் போதே