(Reading time: 6 - 11 minutes)
Malargal nanainthana paniyale
Malargal nanainthana paniyale

“சொர்கமா????” என விழித்த உதய், தாமதமாகவே புரிந்துக் கொண்டு, “ஓ.... சாரி.... அப்பா??” என்றான்!

   

“அவர் இருக்கார்... சித்தி அப்புறம் அவங்க பசங்க கிட்ட பிஸியா இருக்கார்...”

   

“ஓ... சாரி...”

   

“பரவாயில்லை ஜென்டில்மேன்... உங்க அம்மா என் மேல பரிதாப பட்டு இந்த கம்பெனியன் + டிடக்டிவ் வேலை கொடுத்திருக்காங்க... இந்த வேலை, சம்பளம் இரண்டுமே எனக்கு வேணும்...”

   

“ம்ம்ம்ம்...”

   

“ரொம்ப ஃபீல் செய்றீங்களே... என்னை பார்த்து அவ்வளவு பரிதாபமா இருந்தா உங்க லவர் யாருன்னும் சொல்லிடுங்க... உங்களுக்கும் நல்லது, எனக்கும் நல்லது!”

   

“எனக்கு என்ன நல்லது?”

   

“நீங்க பூகம்பம் எரிமலைன்னு எல்லாம் பில்ட் அப் கொடுக்குறதை பார்த்தால் நீங்களா உங்க அம்மா கிட்ட சொல்ல மாட்டீங்க போலருக்கு... நான் அம்மா கிட்ட போட்டு கொடுத்தாலும் உங்களுக்கு ஹெல்ப் செய்ற மாதிரி தானே?”

   

உதய்க்கு பிரியாவின் நட்பான பேச்சு பிடித்திருந்தது... எனவே கோபப் படாமல்,

   

“நல்ல ஐடியா தான்... ஆனால் அதுக்கு முன்னாடி நான் என் ட்ரீம் கேர்ள் கிட்ட என் காதலை சொல்லனுமே,” என்றான்.

   

“என்னது????”

   

“யெஸ், அவளுக்கே இன்னும் தெரியாது...” என்ற உதயின் முகத்தில் இப்போது புன்னகை மலர்ந்திருந்தது!

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.