(Reading time: 6 - 11 minutes)
Malargal nanainthana paniyale
Malargal nanainthana paniyale

   

“என்னடா, எதுவோ சொல்ல வந்த?”

   

“ஒண்ணுமில்லைம்மா... நான் பெரியப்பா வீட்டுக்கு போயிட்டு வரேன்.”

   

“அங்கே எதுக்கு இப்போ???”

   

“போர் அடிக்குதும்மா... சரத் கிட்ட நிறைய பேச வேண்டி இருக்கு.”

   

“சரி சரி... பார்த்து போ... டிரைவரை கார் ஓட்ட சொல்லு!”

   

“ஏன், நான் என்ன குழந்தையா? என்னம்மா நீங்க...!”

   

“உன் நல்லதுக்கு தானேப்பா சொல்றேன்...”

   

“சரி, சரி... இப்படி சோகமா முகத்தை வைக்காதீங்க... நான் முருகாவையே ஓட்ட சொல்றேன்... பை....” என்று சொல்லிவிட்டு நடந்த உதய்க்கு, இப்படி சிறு குழந்தை போல அவ்வப்போது நடந்துக் கொள்ளும் அம்மாவை எப்படி சமாளிக்க போகிறோம் என்ற கேள்வியே அதிகமாக இருந்தது.

   

முருகனிடம் சைகை செய்து காரை எடுக்க சொல்லி விட்டு உதய் காரின் பின் சீட்டில் அமரவும், ப்ரியா அங்கே வரவும் சரியாக இருந்தது.

   

“நானும் உங்க கூட வரேன்,” என்றாள் ப்ரியா.

   

“நீயா? நான் எங்கே போறேன்னு உனக்கு தெரியுமா?”

   

“உங்க பெரியப்பா வீட்டுக்கு... அது தான் நீங்க சொன்னது எனக்கு நல்லா கேட்டுச்சே...”

   

“ஒட்டுக் கேட்டியா?”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.