“உதய், ப்ரியா என் ஃப்ரென்டோட மகளா இருந்தாலும், இங்கே எனக்கு உதவியா இருக்க வந்திருக்கா. அவளுக்கு நான் சம்பளமும் கொடுக்குறேன்...”
அதற்கு நான் என்ன செய்ய வேண்டும் என்பது போல அவள் பக்கம் ஒரு பார்வை பார்த்தான் உதய்.
“நான் சொல்ல வரது உனக்கு புரியுதா?” என்றாள் ரேவதி.
“ஹுஹும்ம்... புரியலையே அம்மா!”
“இங்கே பார், உன்னை நான் கல்யாணம் செய்துக்கோ செய்துக்கோன்னு சொல்லிட்டு இருக்கேன்...”
“ஆமாம்...”
“உனக்கு கல்யாண ஆசை வந்தா என் கிட்ட சொல்லு, உனக்கு நல்ல பொண்ணா பார்த்து கண்டுப்பிடிச்சு கல்யாணம் செய்து வைக்கிறேன்.”
உதய் ப்ரியா சென்ற திசையை பார்த்து விட்டு,
“ஏம்மா, இப்படி பேசுறீங்க? நீங்க தானே அந்த பொண்ணை இங்கே அழைச்சிட்டு வந்தீங்க??? அவளா உங்க கூட வரேன்னு சொன்னா?” என்றான்.
“ஏதாவது வேலை வாங்கி தர கேட்டா. நல்ல பொண்ணு தான்... ஆனாலும் நம்ம கிட்ட வேலை செய்ற பொண்ணுடா...”
உதயின் கண் முன் நந்திதா வந்து போனாள்.
ஏதோ சொல்ல நினைத்து பேச தொடங்கியவன், மனதை மாற்றிக் கொண்டு அமைதியானான்.