Chillzee Originals : தொடர்கதை - என் மேல் உன்றனுக்கெத்தனை அன்படி - 15 - சசிரேகா
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
ஒவ்வொரு அடுக்காக இறங்கி வர வர அங்கிருந்த பெண்கள் அவனையும் அவளையும் மாறி மாறிப் பார்த்து கதையே கட்டிவிட்டனர். அதையெல்லாம் பார்த்தபடி வந்த தில்லைக்குதான் கஷ்டமாக இருந்தது, அவளுக்கு அது பெரிதாகத் தெரியவில்லை, அவள் கவனம் முழுவதும் அவன் மீதே இருந்தது. தெருவுக்கு வர அங்கு அவளது காரும் டிரைவரும் இருந்தார்கள். டிரைவரோ காருக்குள் இருந்தபடியே
”சின்னம்மா வாங்கம்மா கிளம்பலாம், இங்க இருக்க வேணாம்மா இது ஆபத்தான இடம், வீட்ல இருந்து போன் பண்ணாங்கம்மா, உங்களை கூட்டிட்டு வரச் சொன்னாங்க வாங்கம்மா” என அழைக்க அதைக் கேட்ட தில்லையோ
”பாரு உன்னை உன் வீட்ல தேடறாங்களாம், உங்கப்பாவைப் போய் பாரு போ” என சொல்ல அவளோ முடியாது என தலையாட்டினாள்.
அந்தத் தெருவில் இருந்த அனைவருமே அவளையே பார்த்தார்கள், அவளின் அந்த ஆடம்பரம் அலங்காரம் அந்த இடத்திற்கு அதிகப்படியாக இருந்தது, அவனும் சுற்றி முற்றி பார்த்துவிட்டு அவளையும் ஒரு முறை பார்த்தான் அங்கிருந்த அவளது காரைக்காட்டி
”இதப்பாரு கார் இருக்கு, டிரைவர் உள்ள இருக்கான், பேசாம இங்கிருந்து கிளம்பு, இந்த இடத்தில உன்னால இருக்க முடியாது போ உங்கப்பாகிட்ட போ” என சொல்ல அவளோ அவளது காரைக் கண்டு மனம் நிம்மதியானாள். ஆனாலும் அவனை விட்டுவிடவும் இயலவில்லை, நியாயம் கிடைத்ததும் காரில் ஏறி தன் தந்தையிடம் சென்றுவிடலாம் என முடிவெடுத்தாள்
தில்லை சொல்வதைக் கேட்ட அடியாள் ஒருவன் உள்ளிருந்த டிரைவரை வெளியே அழைத்து வந்து நிப்பாட்டினான். அந்த டிரைவரோ சம்யுக்தாவிடம்
”அம்மா வாங்கம்மா இங்க இருக்காதீங்கம்மா, ஊர்ல உங்களை தேடறாங்கம்மா வாங்கம்மா” என பதட்டமாக அழைக்க அவளோ அசையவில்லை
”உங்கப்பாவை பார்க்கனும்னு எண்ணம் இல்லையா உனக்கு, அவர் கண்விழிச்சதும் உன்னைத்தான் தேடுவாரு, உங்கப்பாவை பார்த்துக்க ஆளுங்களை போட்டிருக்கேன், என்