(Reading time: 8 - 16 minutes)
En mel undranukkethanai anbadi
En mel undranukkethanai anbadi

இருந்தது, அவன் கூட இருந்த ஆட்கள் சண்டைக்கு வந்தாலும் வந்தவர்களுக்கு கவலையில்லை, யார் தங்களை எதிர்க்க வந்தாலும் கொன்றுவிட்டு தில்லையையும் கொன்று அந்த தகவலோடு அங்கிருந்து சென்றுவிட வேண்டும் என்பது அவர்களின் திட்டம். 

   

அதிலும் துப்பாக்கி வைத்திருந்தவன் ஒருவன் முதலில் தான் ஆரம்பிப்பதாக சைகை செய்ய மற்ற 4 பேரும் கவனமாக காத்திருந்தார்கள், துப்பாக்கிச் சூட்டில் தில்லை இறந்துவிடுவான் அப்படியில்லையென்றால் அடுத்து நால்வரும் சென்று அவன் மீது தாக்குதல் நடத்தலாம், தாக்குதலில் நிச்சயம் அவன் கொல்லப்படுவான் என நம்பினார்கள்.

   

அதன்படி துப்பாக்கி வைத்திருந்தவனும் சரியாக தில்லையின் நெஞ்சை குறிபார்த்து தனது துப்பாக்கியை நீட்டினான். தில்லையும் இன்னொரு பெண்ணுடன் பேசுவது தெரிந்தது, அவளிடம் பேசிவிட்டு அங்கேயே நின்று அவளையே பார்ப்பதைக் கண்டான். ஆடாமல் அசையாமல் சிலை போல தில்லை நிற்கவும் அவனுக்கு மிகவும் வசதியாகிவிட்டது. அவனது துப்பாக்கியின் குறியும் சரியாக இருக்கவே உடனே அவனைப் பார்த்து சுட்டான். அதே நொடி சம்யுக்தா கோபத்தில் தில்லையின் சட்டையை பிடித்து உலுக்கி 

   

”என்னையா மிரட்டற” என அவள் திட்டியபடியே இழுக்க தில்லை சற்று வேறு பக்கம் நகர அந்த துப்பாக்கி தோட்டாவானது அவனைத்  தாண்டி அவனது அடியாளின் தோள் பட்டையில் பட அவன் ஆஆஆ என அலறினான். 

   

அந்தச் சத்தம் கேட்டு தில்லையும் அவனை சுற்றியிருந்த ஆட்களும் பதட்டமானார்கள் ஆனாலும் உடனே கவனமானார்கள் அதில் துப்பாக்கி சுட்டது, அந்த தோட்டா இன்னொருவனுக்கு பட்டது, அதனால் அவன் வலியில் துடித்ததுக் கண்டு சம்யுக்தாவிற்கு பயமே வந்தது. தில்லையின் சட்டையை பிடித்து உலுக்கியவள் பயத்தில் அந்த சட்டையை விடாமல் அவனுடன் இறுக்கமாக ஒட்டிக் கொண்டு கண்கள் மூடி அவனது நெஞ்சில் முகத்தை வைத்து மூடிக் கொண்டு இருந்தாள். அவளின் உடல் நடுங்கிக் கொண்டிருந்தது.

   

அதை முதலில் கவனியாத தில்லையோ யாரோ எதிரிகள் வந்துவிட்டதாக நினைத்து சட்டென எதிர் தாக்குதலுக்கு தயார் ஆனான். மளமளவென தனது ஆட்களிடம் ஆணை பிறப்பித்தான்

   

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.