பத்திரமா இருக்காங்கண்ணா” என சொல்ல சம்யுக்தாவும் அதைக்கேட்டுக் கொண்டு அமைதியாக இருந்தாள் அவளின் அமைதியைக்கண்ட தில்லையோ அவளிடம்
”கேட்டல்ல உங்கப்பாவுக்கு எதுவும் ஆகலையாம் கிளம்பறியா நீ”
”முடியாது அவர் புண்ணியம் செஞ்வரு, அதனால அவருக்கு எதுவும் ஆகலை, நீ என்ன பாவம் செஞ்சியோ என் வாழ்க்கையை அழிச்சிட்ட, மரியாதையா எனக்கான நியாயத்தை நீ வழங்கிட்டுத்தான் போகனும்” என கோபமாக சொல்ல அவனோ
”இதப்பாரு இப்ப நீ கிளம்பலை, உன் குடும்பத்தை பத்திரமா பார்த்துக்கிட்டிருக்கற என் ஆளுங்களை வைச்சே அவங்க எல்லார் கதையையும் முடிச்சிடச் சொல்வேன், அப்புறம் நீ அநாதையாதான் இந்த உலகத்தில வாழனும் பரவாயில்லையா” என கேட்டான், அதற்கு அவளோ அவனை குரூரமாக பார்த்தாள், விட்டால் அடித்துவிடுவாள் போல, அவள் என்ன பதில் சொல்லப் போகிறாள் என அவனைச் சுற்றியிருந்த ஆட்கள் அவளையே பார்க்க அவனும் அக்கம் பக்கத்தை மறந்து அவள் போவாளா மாட்டாளா என உள்ளுக்குள் எதிர்பார்ப்போடு அவளின் முன் தில்லாக நின்றான்.
அந்நேரம் பார்த்து அந்த ஏரியாவைச் சுற்றிலும் அவனது எதிரியின் ஆட்கள் ஊடுருவி சுற்றி மறைந்திருந்தனர். அதைப்பற்றி யாரும் அறியவில்லை. அடியாட்கள் போல தெரிந்தால் சந்தேகம் வரக்கூடும் என சந்தேகம் வராத மாதிரி வெளியூர் ஆட்களை எதிரி நியமித்திருந்தபடியால் யாரும் பெரிதாக கண்டுக் கொள்ளவில்லை.
மெல்ல எதிரியின் ஆட்கள் அந்த அடுக்குமாடி குடியிருப்பில் ஆங்காங்கு மறைந்து கொள்ளக்கூடியபடி இருந்த சில இடங்களில் பதுங்கியபடியே என்ன நடக்கிறது என கண்காணித்தனர்.
அதில் தில்லையும் அவனது ஆட்களும் வெளியே வந்து நிற்பதைக் கண்டு தயாரானார்கள். அதில் மொத்தம் 5 பேர் இருந்தார்கள், அதில் இருவரிடம் துப்பாக்கியும், இருவரிடம் அரிவாள், கத்தி போன்ற ஆயுதங்களும் இருந்தன, வந்தவர்களின் எண்ணம் எல்லாம் தில்லை மட்டுமே, அவனை கொல்லச் சொல்லி ஆணை வந்துள்ளது, அதனால் அவர்களின் கவனம் தில்லையின் மீதே