ஆளுதான் நல்லவன், டாக்டரா இருக்கான், அவனே உங்கப்பாவை காப்பாத்தி பத்திரமா பார்த்துக்குவான் நீ எதுக்கும் கவலைப்படாத கிளம்பு” என அமைதியாகவே தில்லை சொன்னான் ஆனால் அவளோ
”என் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கிட்ட, உன்னாலதான் அந்தக் கல்யாணம் நின்னுச்சி, அதனாலதான் எங்கப்பாவுக்கு உடம்பு சரியில்லாம போச்சி, நீ அவருக்கு நல்லது செய்வியா இல்லை, நீ அவரை கொல்ல திட்டம் போட்டிருக்க, அவரை நீ சாகடிச்சிடுவ எனக்குத் தெரியும்”
”ஏய் நான் அப்படிப்பட்டவன் கிடையாது, உங்கப்பாவை கொன்னா எனக்கு என்ன லாபம் சொல்லு, லாபம் இல்லாத வேலையை நான் செய்ய மாட்டேன், நீயும் சரி உன் அப்பனும் சரி உங்களால எனக்கு நஷ்டம்தான், உங்களையும் எதையும் செய்ய விடமாட்டேன், பேசாம கிளம்பு போ” என விரட்ட அவளோ தைரியமாக நின்று தில்லையிடம் பேசினாள்.
”எனக்கு நியாயத்தை சொல்லு, நான் கிளம்பறேன் இல்லை என்கூட வா வந்து எல்லார் முன்னாடியும் மன்னிப்பு கேளு, அப்ப நான் உன்னை விடறேன்”
”அதெல்லாம் முடியாது நான் வரமாட்டேன்“
”அப்ப உன்னை விட்டு நான் போக மாட்டேன்” என சொல்ல அவனோ தனது அடியாளில் ஒருவனை அழைத்தான்
”டேய் வாடா இங்க” அவனும் வந்து நின்றான்
”சொல்ணே”
”மதுரையில இப்ப என்ன நடக்குது சத்தமாச் சொல்லு“
”மதுரையாண்ணே இவங்க அப்பா இருக்கற ஆஸ்பிட்டல்ல பெரிசா எந்த பிரச்சனையும் இல்லை, இவங்களோட அப்பாவும் பிழைச்சிட்டாரு இன்னும் கண்ணு திறக்கலை, இவங்களோட தாய்மாமன் எல்லாரையும் பார்த்துக்கறாரு, அவங்க எல்லாரையும் நம்ம ஆளுங்க 2 பேர் பார்த்துக்கறாங்க ஒருத்தன் டாக்டர், இன்னொருத்தன் நம்ம ஆளு நம்ம கண்காணிப்பில அவங்க