(Reading time: 6 - 12 minutes)
Vaanum mannum katti kondathe
Vaanum mannum katti kondathe

காருல வரட்டும்...”

   

அக்ஷராவும் பதிலுக்கு அதே கிசுகிசு குரலில் பேசினாள்.

   

“என்னடா உளறுற? இன்னைக்கு அவங்க வெடிங் ஆனிவெர்சரி. இன்னைக்கு அவங்களை பிரிச்ச பாவம் எனக்கு வேணாம்!”

   

“ஏய் பேக்கு, இரண்டு அம்மாவும் ஒன்னா இருந்தா ஃப்ரீயா கதை பேசிட்டு வருவாங்க. அவங்களுக்கு ரிலாக்ஸ்டா இருக்கும். அப்பா கூட இருந்தா ஒன்னு அப்பா சொல்றதை கேட்டு ம்ம்ம் போடுவாங்க, இல்லன்னா தூங்குவாங்க. அதும் முக்கியமா உங்க அம்மா வீட்டை விட்டு வெளியே வரதே அதிசயம். இப்படி வந்திருக்க டைம்ல அவங்க ஃப்ரெண்ட் கூட தனியா கொஞ்ச நேரம் ஸ்பென்ட் செய்யட்டுமே. வெடிங் ஆனிவர்சரி இன்னைக்கு முழு நாள் இருக்கே, அம்மா, அப்பா வீட்டுல போய் கொண்டாட்டத்தை கண்டின்யூ செய்துப்பாங்க.”

   

“ஹப்பா, இவ்வளோ யோசிக்குறீயே, எப்படிடா அஷ்!!! நீ சொல்றதும் சரி! இரண்டு அப்பாங்க தனியா மொக்கை போடட்டும். அம்மாங்க மட்டும் இல்ல, நானும் உன் கூடயே வரேன்!”

   

“முதல்ல பேசு... அப்பா உடனே சரின்னு சொல்ல மாட்டார். அவரால அம்மாவை பிரிஞ்சு இருக்க முடியாது. எப்படியாவது பேசி சமாளி.”

   

“இதெல்லாம் நீ எனக்கு சொல்லி தரனுமா ஆஷ், இப்புடு சூடு!!!”

   

ஆகாஷிடம் ஸ்டைலாக சொல்லி விட்டு, நேராக பிரகாஷிடம் சென்றாள் அக்ஷரா. மனைவியிடம் பேசிக் கொண்டிருந்தவரை தனியே அழைத்து பேசினாள்.

   

பின் மீண்டும் ஆகாஷை நோக்கி வந்தவள், “சக்சஸ்,” என்றாள் உற்சாகத்துடன்!

   

“எப்படிடி?”

   

“அதெல்லாம் சீக்ரட் அஷ் சொல்ல முடியாது,” என அக்ஷரா சொல்லி கொண்டிருக்கும் போதே, பிரகாஷ் அவர்களை நோக்கி வந்தார்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.