“நான் அங்கிள் கிட்ட உங்களுக்கு கமர்கட் ரொம்ப பிடிக்கும். இங்கே புதுச்சேரில ஒரு பேக்கரில மட்டும் தான் ஹோம்-மேட் கமர்கட் கிடைக்கும். அதை வாங்கி கொடுத்தீங்கன்னா, ஆன்ட்டி அப்படியே மயங்கிடுவாங்க... நீங்களே தனியா போய் வாங்கிட்டு, வீட்டுக்கு போனப்புறம் சர்ப்ரைஸ் கிஃப்ட்டா கொடுங்கன்னு சொன்னேன்... அவ்வளோ தான், அங்கிள்க்கு அப்போவே தலை சுத்தி போச்சு... தனியா கிளம்பிட்டார்...”
“கமர்கட்டா??? எனக்கு அது பிடிக்கும்ன்னு ஏன் சொன்ன?”
“உங்களுக்கு பிடிக்கலைனா எனக்கு கொடுங்க. எனக்கும் அகிலாக்கும் ரொம்ப பிடிக்கும். அவ இங்கே கோவிலுக்கு வரும் போதெல்லாம் வாங்கிட்டு வருவா...”
“கமர்கட் இருக்கட்டும், நீ எதுக்கு அங்கிள் கிட்ட பொய் சொன்ன?”
“எல்லாம் உங்க மகன் ஐடியா தான்!”
“யாரு அகாஷா? என்ன சொன்னான்???”
“அம்மாவும் நீங்களும் ஒன்னா ட்ராவல் செய்தா பேசிட்டே ரிலாக்ஸ்டா இருப்பீங்களாம்... அம்மா வேற அவ்வளவா வெளியே எங்கேயும் போறதில்லைன்னு வேற சொன்னானா, சரின்னு இந்த திருட்டுத்தனம் செஞ்சேன்!”
காரை ஒட்டிக் கொண்டிருத்த ஆகாஷை சுபாஷினி, ஜோதி இருவருமே வாஞ்சையுடன் பார்த்தார்கள்.
“என்ன இரண்டு பேரும் அந்த பக்கம் அவார்ட் லுக் கொடுக்குறீங்க? ஐடியா அவன்து ஆனா அதை செஞ்சு முடிச்சது நான்! இந்த பக்கம் பாருங்க,” என்றாள் அக்ஷரா!
“ஹேய், இதெல்லாம் அநியாயம்!!! ஏற்கனவே ஆன்ட்டி, அங்கிள், அம்மா அப்பா எல்லோரும் செல்லம், செல்லக்குட்டி, பேபின்னு உன்னை தான் கொஞ்சுறாங்க, என் பக்கமா ஒரு பார்வை