(Reading time: 6 - 12 minutes)
Vaanum mannum katti kondathe
Vaanum mannum katti kondathe

பார்த்தா கூட உனக்கு பிடிக்க மாட்டேங்குது! உனக்கே ஓவரா தெரியலை?” என்றான் ஆகாஷ்!

   

“டேய் அஷ்!!!! இவ்வளவு நீளமா பேச கூட உனக்கு தெரியுமா!!!!” என கிடைத்த சின்ன கேப்பில் ஆகாஷை அக்ஷரா கிண்டல் செய்ய, சுபாஷினி,

   

“என்ன ஆகாஷ் நீ, அவ சின்ன பொண்ணு... எனக்கு பொண்ணு பிறக்கும்னு அவ்வளவு ஆசையா இருந்தேன்... அக்ஷராவோட பேரு கூட நான் செலக்ச்ட் செய்து வச்சிருந்தது... ஜோதிக்கு அக்ஷ்ரா பிறந்தப்போ அவ அப்பா வேற ஊருக்கு போயிருந்தார். ஜோதி கூடவே இருந்து குழந்தையை முதல்ல தூக்கினது நான் தான்... அவ எப்போவுமே எனக்கு செல்லம்...” என்றாள்.

   

பலமுறை கேட்டு பழகிய விபரம் என்பதால் அமைதியாக இருந்த ஆகாஷின் பக்கம் பார்த்த அக்ஷ்ரா,

   

“சொந்த செலவுல சூனியம் வைக்குறது இதானா? உனக்கு இதெல்லாம் தேவையா அஷ்? எப்போவும் போல அமைதியா, குட் பாயா சத்தம் போடாம இருக்கிறது உன் வேலை, எல்லாம் செஞ்சு செல்லம் கொஞ்சல்ஸ், பேரு, புகழ் வாங்குறது என் வேலை... அப்படி இருக்குறதால தான் நாம இரண்டு பேரும் சூப்பர் ஜோடிஸ், புரியுதா? ” என்றாள்!

   

அக்ஷரா விளையாட்டாக சொன்ன ‘நாம இரண்டு பேரும் சூப்பர் ஜோடி’ என்ற வார்த்தைகள் பின் சீட்டில் இரண்டு அம்மாக்களின் மனதிலும் மெல்லிய சந்தோஷ சாரலைக் கொடுத்தது.

   

அக்ஷரா என் வீட்டிற்கு மருமகளாக வந்தால் எப்படி இருக்கும் என சுபாஷினி மனசுக்குள் ஆசைப்பட, 

   

ஆகாஷ் அக்ஷராவிற்கு கணவனாக அமைந்தால், அவளின் வாழ்க்கை எப்படி இருக்கும் என ஜோதி மனதினுள் யோசித்தாள்.

   

ஆனால் இருவருமே தங்களின் மன ஆசையை வெளியே சொல்லவில்லை.

   

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.