எல்லாம் வேணும்... நீங்க தான் அதுக்கு பெர்ஃபெக்ட் ஃபிட்! இதை நான் மட்டும் சொல்லலை, உங்க கூட இந்த கொஞ்ச நாளா வொர்க் செய்த மத்த சீனியர்ஸ் எல்லோரும் கூட சொன்னாங்க...”
“தேங்க் யூ உதய்! இது எனக்கு பெரிய ஹானர்! என்னோட 200% கட்டாயம் தருவேன்! இதுக்கு முன்னாடி நான் செஞ்சுட்டு இருந்த வேலைக்கு இது பெரிய லீப்!”
“இல்ல... உங்க ஃபுல் பொட்டேன்ஷியலுக்கு இதுவரைக்கும் ரோல் கிடைக்கலைன்னு வேணா சொல்லுங்க...”
“அப்படி எல்லாம் இல்லை...”
“நோ... நீங்களே உங்களை குறைச்சு நினைக்காதீங்க நந்திதா!”
கொஞ்சம் திகைத்து அவனை பார்த்த நந்திதா, உதய் முகத்தில் வந்த கேள்வியை புரிந்துக் கொண்டு, “இல்ல, என்னோட அப்பா அப்பப்போ என் கிட்ட சொல்ற டையலாக் இது,” என்றாள் மெல்லியக் குரலில்.
அவளை கூர்மையாக ஒரு பார்வை பார்த்த உதய், “உங்களுக்கு உங்க அப்பாவை ரொம்ப பிடிக்குமா?” என்றுக் கேட்டான் மிருதுவான குரலில்.
நந்திதாவிற்கு அவனின் குரலில் வந்திருந்த மாற்றம் புரிந்தது.... பட்டு போன்ற மென்மையான அந்த குரல் ஏதோ விதத்தில் அவளுக்கு இதமாகவும் இருந்தது...
“ஹ்ம்ம்... ரொம்ப பிடிக்கும்... அப்பான்னு மட்டும் இல்லை, அம்மாவையும் பிடிக்கும்... இந்த மாதிரி அவங்க இரண்டு பேரும் இல்லாமல் இருப்பேன்னு நான் நினைக்கவே இல்லை...”
நந்திதாவின் குரல் மெல்ல உடைந்து ஒலித்தது...
“ஐ னோ... நந்திதா... என்னால புரிஞ்சிக்க முடியும்... என்னோட அப்பா நான் சின்ன குழந்தையா இருக்கும் போதே தவறிட்டார்... ஸ்கூல் டைம்ல மத்த பசங்களோட அப்பாவை பார்க்கும்