(Reading time: 7 - 13 minutes)
Malargal nanainthana paniyale
Malargal nanainthana paniyale

   

நந்திதா பார்வையை திருப்ப மனமில்லாமல் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்...!

   

“அது சொல்றதுக்கு ஈசி நந்திதா... ஆனால் நடக்குறது அவ்வளவு ஈஸி இல்லை...!”

   

உதயின் முகத்தில் தோன்றி இருந்த மாற்றம் எழுப்பி இருந்த கேள்வி, அதனால் அவளுள் அவளையும் மீறி ஏற்பட்ட எதிர்பார்ப்பு என அனைத்தையும் மீறி, உதய் சொன்ன விஷயம் ஆர்வத்தை கிளப்ப, “ஏன், அப்படி சொல்றீங்க?” என்றுக் கேட்டாள் நந்திதா.

   

“அது அப்படி தான்...! நான் சொன்னேன்ல ஒரு பொண்ணை லவ் செய்றேன்னு...”

   

“ஓ! ஆனால் அதனால் என்ன?”

   

“அம்மாக்கு அவளை பிடிக்கனும்... அப்புறம்...”

   

“அப்புறம்...???”

   

“அவளுக்கும் என்னை பிடிக்கனும்...!”

   

கண்கள் ஜொலிக்க, உதய் அவளை நேராக பார்த்து சொன்ன விதத்தில் நந்திதாவிற்கு மெய் சிலிர்த்தது....!

   

அவன் இப்போதும் அவளையே பார்த்துக் கொண்டிருக்க, கஷ்டப் பட்டு கண்களை வேறு பக்கம் திருப்பிய நந்திதா, “இன்னுமா நீங்க அவங்க கிட்ட சொல்லலை?” என்றாள் நம்ப முடியாத குரலில்....!

   

“என்ன இது கூடவா செய்யலைங்கற மாதிரி கேட்குறீங்க?

   

“அப்படி இல்லை உதய்... எனக்கு தெரிஞ்ச அளவுல நீங்க ரொம்ப ஸ்ட்ரெயிட் ஃபார்வர்ட்.... அதான் எனக்கு ஆச்சர்யமா இருக்கு...”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.