“ஸ்ட்ரெயிட் ஃபார்வர்ட்! நான்? தேங்க்ஸ் ஃபார் தட் நந்திதா!”
“யூ ஆர் வெல்கம்! எங்க அப்பா கிட்டேயும் எனக்கு பிடிச்ச ஒரு க்வாலிட்டி அது,” என்றாள் நந்திதா சின்ன புன்னகையுடன்.
“க்ரேட்! விட்டா உங்க அப்பாவோட கேரக்டரிஸ்டிக்ஸ் எல்லாமே என் கிட்டே இருக்குன்னு சொல்லுவீங்க போலிருக்கே...”
கேலி போல சொன்னாலும், உதயின் பேச்சில் ஏதோ மறை பொருள் இருப்பதாக நந்திதாவிற்கு தோன்றியது....!
உடனேயே மண்டையில் ஒன்று ‘வர்ச்சுவலாக’ போட்டுக் கொண்டவள், எல்லாம் உன்னோட நினைப்பு தான் என தன்னை தானே திட்டிக் கொண்டாள்...!
“உதய், உங்களுக்கு அட்வைஸ் செய்றேன்னு நினைக்காதீங்க... உங்க அம்மாக்கு பிடிச்ச மாதிரியே உங்க மனைவியை செலக்ட் செய்ங்க... உங்களுக்காகவே இவ்வளவு வருஷம் ஸ்பென்ட் செய்தவங்க... ஸோ, இனிமேல் அவங்களை சந்தோஷமா பார்த்துக்க வேண்டியது உங்க கடமை...”
“ஹ்ம்ம்.... இன்ட்ரஸ்டிங்....! பட் நந்திதா, காதல் அப்படி எல்லாம் யோசிச்சு வருமா என்ன?”
“இல்லை தான்...! ஆனால் நம்ம வாழ்க்கையை நாம தானே டிஃபைன் செய்யனும்.... இன்னும் நீங்க அவங்க கிட்ட உங்க காதலை சொல்லவும் இல்லைன்னு சொல்றீங்க.... ஸோ யோசிங்க.... பொறுமையா முடிவெடுங்க... உங்களுக்கு பிடிச்சவங்களையே உங்க அம்மாக்கும் பிடிச்சா உங்க லைஃப் பீஸ்ஃபுல்லாவும் இருக்கும், நிம்மதியாவும் இருக்கும், சந்தோஷமாவும் இருக்கும்!”
“ஓ காட் நந்திதா! உங்க கிட்ட பேசினால் என் மனசையே மாத்திடுவீங்க போலிருக்கே! நீங்க என் பக்கம் இருப்பீங்கன்னு பார்த்தா, நீங்க அம்மா பக்கம் பேசுறீங்க.... நீங்க ரொம்ப