போது மனசுக்குள்ள ரொம்ப ஏக்கமா இருக்கும்... ஆனாலும் முடிஞ்ச அளவு அதை வெளியே காட்டிக்காமல் இருப்பேன்...”
“ஏன்?”
“என் அம்மாவுக்காக! அந்த சின்ன வயசுல எனக்கு எல்லாம் புரிஞ்சதுன்னு சொல்ல மாட்டேன்... ஆனால் அம்மா எனக்கு சின்ன வருத்தம் கூட இருக்க கூடாதுன்னு எக்ஸ்ட்ரா கேர் எடுத்து எல்லாம் செய்றது புரிஞ்சது...”
“ஓ!”
அவளை வித்தியாசமாக ஒரு பார்வை பார்த்த உதய், “அப்போ எல்லாம் அம்மாக்காகவே யோசிச்சு எல்லாம் செய்வேன்,” என்றான்.
நந்திதாவிற்கு அவனின் பார்வையில் தோன்றி மறைந்த மாற்றம் புரியவில்லை... ஆனால் அதை பற்றி அதிகமாக யோசிக்காமல் பேச்சை தொடர்ந்தாள்...
“அப்போன்னு சொல்றீங்க! இப்போ எல்லாம் அப்படி செய்றதில்லையா??”
“கொஞ்சம் கஷ்டமா இருக்கு நந்திதா...! என் அம்மா கண்ணுக்கு நான் இன்னும் சின்ன பையனா தெரியுறேன்! ஆனால் நான் அப்படி குழந்தையாவே இருக்க முடியுமா??? இப்போவும் ஒவ்வொரு நாளும் நடக்குறது எல்லாத்தையும் அவங்க கிட்ட சொல்லனும்... அவங்க சொல்றது எல்லாம் அப்படியே கேட்கனும்னு எதிர்பார்க்கிறாங்க...”
“ஐ சீ! அவங்களுக்கு துணைக்கு ஒருத்தர் வேணும்னு எனக்கு தோணுது... சீக்கிரமா கல்யாணம் செய்துக்கோங்க... அப்போ உங்க அம்மாக்கு பேச்சு துணைக்கு ஒருத்தர் கிடைச்சிடுவாங்க...”
உதய் மீண்டும் அவளை குறுகுறுவென ஒரு பார்வை பார்த்தான்...
அது வரை அவன் முகத்தில் இருந்த தீவிர பாவம் காணாமல் போனது..! ஒருவிதமான சிறுபிள்ளைத்தனமான புன்னகை தோன்றியது..!