Chillzee Originals : தொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 04 - பிந்து வினோத்
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
ரிலேடிவ்ஸ் ஆக போறோம்,” என்றாள் அக்ஷரா இலகுவாக!
“ஆனா உனக்கும் ஆகாஷுக்கும் சரியா வருமா??? அவன் ஒரு வார்த்தை பேச அஞ்சு மணி நேரம் யோசிப்பான். நீ நூறு வார்த்தை பேசிட்டு தான் என்ன பேசினேன்னு யோசிப்ப, எப்படி செட் ஆகும்?”
“எல்லாம் செட் ஆகும்! என் அம்மா, அப்பாவை பாரு...! எங்கம்மாக்கு டி.வி தான் உலகம், எங்கப்பாக்கு ஆஃபிஸ் தான் உலகம்... அம்மா வீட்டை விட்டு வெளியே போறது அபூர்வம். ஆனா அப்பாவை வீட்டுல பார்க்குறதே அபூர்வம்... இப்படி டோடல்லா வித்தியாசமா இருந்தாலும் இரண்டு பேரும் அன்பா இருக்காங்க! அதே மாதிரி தான் நானும், ஆகாஷும்”
அக்ஷரா அத்தனை சொல்லியும் அகிலாவிற்கு ஏனோ இந்த திருமண ஐடியா சரியான பொறுத்தம் இல்லை என்ற எண்ணத்தையே கொடுத்தது.
இவ்வளவு நேரமாக பெண்கள் பேசுவதை அமைதியாக கேட்டுக் கொண்டிருந்த கணேஷ்,
“கங்க்ராட்ஸ் அக்ஷரா,” என சொல்லி தன் கையை அக்ஷரா பக்கமாக நீட்டினான்.
“என்ன கணேஷ் நீ, நான் இங்கே என்ன சொல்லிட்டு இருக்கேன்... நீ என்ன கங்கிராட்ஸ் சொல்லிட்டு இருக்க?” என அவனிடம் கோபப்பட்டாள் அகிலா.
அதைப் பற்றி கவலைப் படாமல் பொறுமையாக அக்ஷ்ராவின் கையை குலுக்கி வாழ்த்து சொன்ன கணேஷ், பின் அகிலாவிடம்,
“ஒரு ஃப்ரென்ட் மேரேஜ் ஃபிக்ஸ் ஆகி இருக்குன்னு சொன்னா கங்கிராட்ஸ் சொல்லி சந்தோஷப் படாம, உன்னை மாதிரி இது சரியா இருக்காது, அது சரியா இருக்காதுன்னா சொல்வாங்க?? சரியான இம்சையா மாறிட்டு இருக்க ஆகி நீ,” என்றான்.
“உனக்கு புரியலை கணேஷ்...”