அக்ஷராவும் சிரித்துக் கொண்டே அந்த பேச்சிலும் கலந்துக் கொண்டாள். ஆனால், அகிலாவின் பேச்சை திசை மாற்ற வேண்டுமென்றே தான் கணேஷ் அப்படி பேசி இருப்பானோ என்று அவளுக்கு உள்ளுக்குள் சந்தேகமாக இருந்தது...
கணேஷ் தொடர்ந்து அகிலாவை கலாட்டா செய்து அதே ‘மோடில்’ வைத்திருக்கவும், அப்படி தான் என்று அவளுக்கு தெளிவாகவே புரிந்தது! ஹீ இஸ் சோ ஸ்வீட் என நண்பனை பற்றி மனதினுள் நினைத்தவள், அதே மகிழ்ச்சியுடன் அவர்களின் அரட்டையை தொடர்ந்தாள்!
✽✽✽
சல சல என சத்தத்துடன் ஓடும் தெளிந்த நீரோடை... அதில் மருண்ட விழிகளுடன் பார்த்த படி நீரை பருகும் புள்ளி மான்கள்...
சிறிது தூரத்தில் வெள்ளிக்கம்பிகளாய் சிதறும் நீர்த்துளிகளுடன் அழகிய அருவி...
அருவியின் அழகை ரசித்த படி பறக்கும் சின்ன பறவை...
“சினேகா...!!!!!”
சத்தமாக ஒலித்த குரலில், தன் virtual இயற்கை உலகை விட்டு பிரிந்து வந்து கண்களை திறந்தாள் சினேகா! எதிரே கோபமே உருவாக நின்றிருந்தார் அவளின் மேனேஜர் ருத்ரபாண்டியன்!
அவள் இருக்கும் இடம் எது என்பதன் உணர்வு வர, மரியாதையுடன் எழுந்து நின்றாள் அவள்!
“ஆஃபிஸ்ல உட்கார்ந்து தூங்கிட்டா இருக்க?”
“தூங்கலை சார்... லாஸ்ட் டென் டேஸா அந்த ப்ளான்ல டே, நைட்ன்னு வொர்க் செய்து ஒரே தலைவலி... ஒரு ஃபைவ் மினிட்ஸ் கண்ணை மூடி ரெஸ்ட் எடுக்கலாம்னு நினைச்சேன்...”