Chillzee Originals : தொடர்கதை - என் மேல் உன்றனுக்கெத்தனை அன்படி - 26 - சசிரேகா
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
அவளோ அங்கிருந்து வெளியேறினாளே தவிர எங்கும் செல்லவில்லை ஊருக்கு செல்லவில்லை மாறாக தனது காரிடம் வந்தாள். கார் கதவு லாக் செய்யவில்லை அதைக் கண்டு வியந்தாள்
”எப்படியிருந்தாலும் நாம கிளம்புவோம்னு நினைச்சி ரெடியா காரை லாக் பண்ணாம வைச்சிருக்காங்க போல, நாம ஏன் போகனும் இன்னிக்கு போனா என்ன நாளைக்கு கண்டிப்பா நான் அவர்கிட்ட நியாயம் கேட்டேத் தீருவேன்” என நினைத்தவள் காரின் பின்சீட்டில் ஏறிக் கொண்டாள் ஏசியை போட்டுவிட்டு நிம்மதியாக பின்சீட்டில் படுத்து உறங்க ஆரம்பித்தாள்.
சம்யுக்தா காருக்குள் உறங்குவதை பார்த்துவிட்ட தில்லையின் ஆட்களும் சிரித்தனர்
”தில்லை அண்ணாகிட்ட யாராலயும் தங்கிட முடியாது” என ஒருவன் சொல்ல அதற்கு மற்றொருவனோ
”ஆமாம் ஆனா, பாவம் அந்த பொண்ணு இவ்ளோ கஷ்டப்படுதே” அதற்கு இன்னொருவன்
“அண்ணா வேற அந்த பொண்ணுக்கு நியாயம் வழங்காம இருக்கறது கஷ்டமாயிருக்கு”
”நாளைக்கு நான் அண்ணாகிட்ட பேசப் போறேன்”
”என்ன பேசப் போற”
“இவளுக்கு நியாயம் வழங்கச் சொல்லிக் கேட்பேன், இவளை பார்க்கறப்ப எனக்கு கஷ்டமாயிருக்கு ஏதோ என் தங்கச்சியே கஷ்டப்பட்டா எப்படி வலிக்குமோ அப்படியிருக்கு”
”எனக்கும்தான் தனியா வேற இருக்காளே”
”ஆனா காருக்குள்ளதானே இருக்கா”
“சரி வா அவள் தூங்கட்டும், நாளைக்கு அண்ணாகிட்ட பேசி முடிவெடுக்கலாம்”