அவனது ஆட்கள் எதிரிகளை பிடிக்க சிலர் ஓட, சிலரோ சம்யுக்தாவின் காரில் இருந்த நெருப்பை அணைக்க போராடினார்கள்.
அதில் உள்ளிருந்த சம்யுக்தாவிற்கோ மூச்சு விட இயலவில்லை, புகை சூழ்ந்துக் கொண்டது, கதவும் லாக்காகிவிட்டது, அவளால் எதையுமே செய்ய இயலவில்லை. காரின் டிரைவரும் வெளியே வந்து பார்த்து பயந்துவிட்டான், அவனும் கதவை திறக்க முயன்றான், முடியவில்லை, போராடி பார்த்து அய்யோ அம்மாவை யாராவது காப்பாத்துங்க என அலறினான். தில்லையின் ஆட்களும் அந்த வண்டியின் கண்ணாடிகளை உடைக்கலானார்கள். அதற்குள் தில்லையும் ஓடி வந்தவன்
”டேய் நிறுத்துங்கடா” என கத்த
”அண்ணே அந்த பொண்ணு உள்ள இருக்கு”
“தெரியுது எதுக்கு கண்ணாடியை உடைக்கறீங்க, நெருப்பு உள்ள போறதுக்கா தள்ளி நில்லுங்கடா” என அவசரகதியில் சொல்லிவிட்டு அவசரமாக அந்த காரின் கதவை திறக்க முயன்றான், அனல் வீச அதைக்கண்ட தில்லை மற்றவர்களிடம்
”தண்ணி ஊத்தி நெருப்பை அணைங்கடா” என சொல்ல அவர்களும் காரின் மீது தண்ணீரை ஊற்றினார்கள். ஆனாலும் எரிந்துக் கொண்டேதான் இருந்தது.
”வண்டியோட பெட்ரோல் டேங்க்ல நெருப்பு பிடிச்சிடப் போகுது, அதுல முதல்ல தண்ணிய ஊத்துங்கடா” என கட்டளையிட அவன் சொன்னதை செய்ய ஒருவன் சென்றான்.
தில்லையும் கஷ்டப்பட்டு முன்பக்க கதவை உடைத்து உள்ளே பார்க்க சம்யுக்தா பின்பக்கம் இருந்தாள், உடனே உள்ளே நுழைந்தவன் அவளை முன்பக்கமாக இழுத்து வெளியே அழைத்து வந்தான். அதற்குள் நெருப்பும் சற்று அணைக்கப்பட்டுவிட்டது. புகை மண்டலம் எழும்பினாலும் யாருக்கும் எதுவும் ஆகவில்லை ஆனால் சம்யுக்தா மட்டும் சற்று பயந்திருந்தாள். இருமினாள். அவளின் நிலைமையைக் கண்டு தில்லைக்கு கவலையாக இருந்தது.
”வண்டியை மறைச்சி வைங்க” என சொல்லிவிட்டு தில்லை அவளை அழைத்துக் கொண்டு தன்