(Reading time: 9 - 17 minutes)
En mel undranukkethanai anbadi
En mel undranukkethanai anbadi

   

அதாவது தாங்கள் கொண்டு வந்த பெட்ரோல் குண்டுகளை வீசி எறிந்து அந்த அடுக்குமாடி குடியிருப்பை கொளுத்தலாம் என்று, அப்படி நெருப்பால் எரியும் குடியிருப்பு பகுதியை விட்டு எப்படியும் தில்லை வெளியே வரலாம், அவனையும் நெருப்பில் எரிய வைத்தோ அல்லது துப்பாக்கியால் சுட்டோ எப்படியோ அவனை கொன்றுவிடலாம் என முடிவெடுத்தார்கள்.

   

அதன்படி தாங்கள் கொண்டு வந்த பெட்ரோல் குண்டுகளை பத்திரமாக வைத்துக் கொண்டே அந்த குடியிருப்பு பகுதியில் பதுங்கியபடியே வந்தார்கள்.

   

அங்கு பெரும்பாலும் வண்டிகள் அனைத்தும் ரோடின் ஓரமாகவே இருந்தன, சம்யுக்தாவின் கார் மட்டும் நடுவில் இருந்தது. அந்த வண்டியும் பார்க்க அழகாக இருந்தது. அந்த காரிடம் சென்று சிலர் மறைந்துக் கொண்டார்கள், உள்ளே யார் இருக்கிறார்கள் என்று கூட அவர்கள் பார்க்கவில்லை, 

   

மெல்ல தாங்கள் வைத்திருந்த பெட்ரோல் குண்டுகளை நெருப்பால் பற்ற வைத்தனர், அதை குடியிருப்பு வீடுகளின் மீது எரிய வேண்டும், அதே நொடி சம்யுக்தாவோ ஏசியின் அளவை குறைக்க எண்ணி வண்டியில் இருந்த லைட்டை ஆன் செய்ய, உடனே காரினுள் வெளிச்சம் வரவும் வந்திருந்தவர்களுக்கு பயமே வந்தது, பதட்டத்தில் தாங்கள் வைத்திருந்த பெட்ரோல் குண்டுகளை தடுமாறி அந்த காரின் மேலேயே போட்டனர், சிலது அவர்களின் மீது விழுந்தது, அவர்கள் அய்யோ குய்யோ என அலறிக்கொண்டு ஓடினார்கள். அந்தச் சத்தம் கேட்டு தில்லையின் அடியாட்கள் விழித்துக் கொண்டனர்.

   

தில்லையும்தான். சட்டென தன் வீட்டில் இருந்து வெளியேறி பால்கனி வழியாக வெளியே பார்த்தான்.

   

அங்கு தூரத்தில் இருவருக்கு நெருப்பு பட்டு அவர்கள் அதில் துடித்தபடியே ஓடினார்கள். அவர்களுடனே வந்திருந்த சிலரும் ஓடினார்கள்.

   

இங்கு சம்யுக்தாவின் காரோ தீயில் பற்றி எரிந்துக் கொண்டு இருந்தது. அதில் தில்லையோ பயந்துவிட்டான். 5வது மாடியில் இருந்து மளமளவென இறங்கி ஓடிவந்தான். அதற்குள் 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.