வீட்டிற்குச் செல்ல அவளது வண்டியும் வேறு ஒருபக்கம் தள்ளிக் கொண்டு சென்று மறைத்துவிட்டனர் அவனது ஆட்கள்.
மெல்ல அந்த இடமும் எதுவும் நடக்காதது போல் மாறிவிட்டது, யாருக்கும் எவ்வித சந்தேகமும் வராத மாதிரி மாற்றினார்கள் தில்லையின் ஆட்கள்.
வந்தவர்களை தேடிச் சென்ற தில்லையின் ஆட்களும் யார் அவர்கள் என தெரிந்துக் கொண்டு திரும்பி வந்தார்கள்.
இங்கு சம்யுக்தாவை வீட்டிற்குள் அழைத்துச் சென்ற தில்லையோ உண்மையில் அவளை நினைத்து மிகவும் கவலைக் கொண்டான்.
”பாரு என்ன நடக்குதுன்னு, நான்தான் சொன்னேன்ல இங்க நீ இருக்கறது ஆபத்துன்னு கேட்கறியா நீ, போன்னு சொன்னா போகாம அடம்பிடிச்சல்ல, இன்னிக்கு உன் உயிரே போயிருக்கும், இப்பவாவது நான் சொல்றதைக் கேளு பிடிவாதம் பிடிக்காம இங்கிருந்து கிளம்பிடு, கருணாவோட ஆளுங்கள்ல எவனோதான் இந்த காரியம் செய்திருக்கனும்”
”அதுக்கு ஏன் என் காரை பத்த வைக்கனும், உன்னை கொல்ல வந்தவங்க உன்கிட்டதானே வந்திருக்கனும்”
”ஆமாம் அதான் ஏன்னு எனக்கும் புரியலை, சரி அதை விடு நடந்தது நினைச்சி நான் ரொம்ப கவலையாயிருக்கேன், என்னால உனக்கு வந்த கஷ்டங்களே போதும், இனி உன் உயிரையும் என்னால இழக்க கூடாது, முதல்ல கிளம்பு ஊருக்கு போ இங்க இருக்காத“
”முடியாது எனக்கு நீ நியாயம் வழங்காம நான் இங்கிருந்து போக மாட்டேன்” என்றாள் உறுதியாக அவனோ
”முட்டாளா நீ, இங்க இருக்கற ஆபத்து தெரியாம பேசற, இன்னிக்கு காரை கொளுத்தினானுங்க, நாளைக்கு என்னையே கொளுத்துவானுங்க, நீயும் என்கூட இருந்தா உனக்கும் அதே நிலைமைதான், சாகனும்னு ஆசைப்படறியா உனக்குன்னு குடும்பம் இருக்கு, முதல்ல கிளம்பு”